indian 2 [file image]
சென்னை : இந்தியன் 2 திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை பிரபல நடிகர் ஒருவர் நிகாரித்துள்ளார்.
சினிமாவை பொறுத்தவரையில் பெரிய பெரிய ஹீரோக்களின் படங்களில் சில பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்தால் அந்த படத்தில் அவர்களுக்கு மக்களிடையே இருந்து நல்ல வரவேற்பு கிடைக்கும். இதன் காரணமாகவே பெரிய ஹீரோக்களின் படங்களில் நடிக்க வாய்ப்பு வராதா? பெரிய இயக்குனர்கள் இயக்கும் படத்தில் நடிக்க வாய்ப்பு வராதா என ஆவலுடன் எதிர்ப்பார்கள்.
அப்படி தான் நடிகரும், இயக்குனருமான ஆர்.ஜே.பாலாஜியும் காத்திருந்துள்ளார். அப்போது தான் அவருக்கு கடவுள் தேடி கொடுத்த வாய்ப்பை போல ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு வந்ததாம். இந்த வாய்ப்பு வந்தவுடனே ஆர்.ஜே.பாலாஜி மிகவும் மகிழ்ச்சியாகிவிட்டாராம்.
ஆனால், ஆர்.ஜே.பாலாஜியால் தேதி பிரச்சனை காரணமாக இந்தியன் 2 படத்தை மறுக்கவேண்டிய சூழ்நிலை ஆகிவிட்டதாம். ஏனென்றால், அந்த சமயம் தான் ஆர்.ஜே. பாலாஜி எல்ஜிகே படத்தை இயக்கி நடித்துக்கொண்டு இருந்தார். எனவே, இந்த படத்தில் நடித்து கொண்டு இருப்பதால் இந்தியன் 2 படத்திலும் நடிக்க கமிட் ஆனால், இரண்டு படங்களுக்கும் தேதி பிரச்சனை ஏற்படும்.
எனவே, வேறு வழியே இல்லாமல் தேடி வந்த இந்தியன் 2 திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை ஆர்.ஜே.பாலாஜி மறுத்துவிட்டாராம். இந்த தகவலை அவரே சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டபோது தெரிவித்துள்ளார். மேலும், இந்தியன் 2 திரைப்படம் பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ளது. படம் வரும் ஜூன் மாதம் வெளியாகவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியானது இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
வாஷிங்டன் : டொனால்ட் டிரம்ப் அமெரிங்க அதிபராக பொறுப்பேற்ற பிறகு பல்வேறு அதிரடி முடிவுகளை, முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மற்ற…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியானது இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சென்னை : கோடைகாலம் ஆரம்பித்து தமிழகத்தில் அடுத்தடுத்த நாட்களில் வெயிலின் தாக்கம் சற்று அதிகரிக்க கூடும் என்று கூறப்பட்டுள்ள நிலையில்,…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. ரோஹித்…
சென்னை : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது கட்டம் நாளை (மார்ச் 10) முதல் தொடங்கி ஏப்ரல் 4ஆம் தேதி…