நடிகர் தனுஷ் அடுத்ததாக இயக்குனர் அருண் மதேஸ்வரன் இயக்கத்தில் ஒரு திரைப்படம் நடிக்கவுள்ளதாக முன்னதாகவே அறிவிப்பு வெளியானது. இந்த அறிவிப்பை தொடர்ந்து படத்தை எந்த நிறுவனம் தயாரிக்கவுள்ளது, படத்திற்கு யார் இசையமைக்கப்போகிறார் என்ற எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை.
இதனை தொடர்ந்து, தற்போது இந்த படத்தை சத்தியஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும், படத்திற்கு “கேப்டன் மில்லர்” என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைக்கவுள்ளதாகவும் ஒரு வீடியோ போஸ்டர் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
போஸ்டரில் தனுஷ் அட்வெஞ்சர் பைக்கில் கெத்தாக வருவது போல காட்டப்பட்டுள்ளது. ஹாலிவுட் தரத்திற்கு போஸ்டர் இருப்பதால், படத்தின் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது. இதுவரை பார்க்காத கெட்டப்பில், தனுஷ் இருக்கிறார். படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே தனுஷ் நடிப்பில் திருச்சிற்றம்பலம், நானே வருவேன் ஆகிய படங்கள் ரிலீஸ் ஆக தயாராகவுள்ளது. இதை தவிர்த்து வாத்தி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் நடித்து முடித்த பிறகு கேப்டன் மில்லர் படத்தில் நடிப்பார் என தெரிகிறது.
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…