தமிழ்நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் “லியோ” திரைப்படம் வெளியாகியுள்ள நிலையில், விஜய்யின் தீவிர ரசிகர்களான ஒரு ஜோடி திரையரங்கிற்குள் திருமண நிச்சயம் செய்த கொண்ட சுவாரஸ்யமான சம்பவம் நடந்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் விஜய் திரையரங்கில் விஜய்யின் தீவிர ரசிகரான வெங்கடேஷ் என்பவர் தனது காதலியுடன் முதல் காட்சியை பார்க்க வந்தார். அப்போது, திரை முன்பு விஜய் ரசிகர்களின் ஆசீர்வாதத்துடனும், விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் முன்னிலையில் தனது காதலியை மோதிரம் மாற்றிக்கொண்டு திருமணம் நிச்சயம் செய்துக் கொண்டார்.
விஜய் முன்னிலையில் திருமணம் செய்ய வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை என்று திருமணமான தம்பதி கூறியுள்ளனர். மேலும், நிச்சயம் செய்த கொண்ட புது மாப்பிளை தனக்கு அப்பா அம்மா கிடையாது என்றும், விஜய் அண்ணா தான் எனக்கு எல்லாமே என்று கூறினார்.
LEO Review : பரபர ஆக்சன்… பக்கா மாஸ்.! தளபதி விஜயின் லியோ எப்படி இருக்கு.?
லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. திரைப்படத்தை காண ரசிகர்கள் பெரும் ஆவலில் இருந்த நிலையில், லியோ திரைப்படம் வெளியாவதை ரசிகர்கள் மிகவும் உற்சாகத்துடன் கடந்த ஒருவாரமாகவே கொண்டாடி வருகின்றன.
தமிழகத்தில் 4 மணி மற்றும் 7 மணி காட்சிகளுக்கும் அனுமதி வழங்கப்படவில்லை என்பதால், 9 மணியளவில் லியோ திரைப்படம் வெளியாகியுள்ளது. திரைப்படம் வெளியாவதற்கு முன்னதாகவே ரசிகர்கள் திரையரங்குகளுக்கு வெளியே மேளதாளங்கள் முழங்க, பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழக – கேரள எல்லையில் வெளியான லியோ திரைப்படம்..!
லியோ
விஜய் நடித்துள்ள லியோ திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கிறார். படத்தை 7 ஸ்க்ரீன் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து இருக்கிறார். பெரிய எதிர்பார்ப்புக்கு வெளியாகியுள்ள இப்படம் வசூல் சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…