ஹாலிவுட் தரத்தில் பக்கா “தளபதி” சினிமா.! மிரட்டலாக வெளியான GOAT ட்ரைலர்…

Published by
பால முருகன்

சென்னை : ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்த விஜய் நடித்த ‘கோட்’ படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள கோட் படம் வரும் செப்டம்பர் மாதம் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், படத்திற்கான டிரைலர் ஆக 17 வெளியாகும் என படத்தின் தயாரிப்பு நிறுவனம் முன்னதாக அறிவித்து இருந்தது. அந்த அறிவிப்பை தொடர்ந்து டிரைலர் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் காத்திருந்த நிலையில், படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.

டிரைலரில் இடம்பெற்றுள்ள காட்சிகள் எல்லாம் ஹாலிவுட் படங்களில் வரும் காட்சிகளை போல இருப்பதால் படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது. விஜய் பேசும் வசனங்கள் அத்துடன் வரும் பின்னணி இசை என அனைத்தும் காண்போரை மெய் சிலிர்க்க வைத்துள்ளது.

இதற்கு முன்னதாக படத்தில் இருந்து வெளியான போஸ்டர்கள் மற்றும் பாடல்களில் விஜயின் லுக் பற்றி எதிர்மறையான விமர்சனங்கள் எழுந்த நிலையில், டிரைலரில் அனைவரையும் கவரும் வகையில் ரெடி செய்து வெங்கட் பிரபு எதிர்மறையான விமர்சனங்களுக்கு சரியன பதிலடி கொடுத்துள்ளார்.  அதைப்போலவே, கோட் படத்தில் இருந்து பாடல்கள் வெளியாகும்போதும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மீது விமர்சனங்கள் எழுந்தது.

அந்த  விமர்சனங்கள் அனைத்திற்கும் பதில் அளிக்கும் விதமாக, கோட் டிரைலரில் பின்னணி இசையில் யுவன் சங்கர் ராஜா காட்சிகளுக்கு பக்க பலமான இசையை கொடுத்துள்ளார். டிரைலரை பார்த்துவிட்டு அவருடைய இசையையும் பாராட்டி வருகிறார்கள். மொத்தமாகவே, கோட் டிரைலரில் பெரிய அளவில் குறைகள் இல்லை என்பதால் படத்திற்கு தான் அடுத்த வெயிட்டிங் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

Published by
பால முருகன்

Recent Posts

“பெஞ்சல் புயல் பாதிப்புக்கு இதுவரை மத்திய அரசு எந்த நிதியும் வழங்கவில்லை”..முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

சென்னை : சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் பெஞ்சல் புயல் பாதிப்புக்கு இதுவரை எந்த நிதியும் மத்திய அரசு வழங்கவில்லை என்கிற…

30 minutes ago

“எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே” திமுகவை விமர்சித்த த.வெ.க.தலைவர் விஜய்!

சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆளுநர் உரை மீதான விவாதத்தின்போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி  “நீட் தேர்வை…

1 hour ago

அதிமுக கருப்பு சட்டை அணிந்து வந்த போது கோபம் இல்லை சிரிப்புதான் வந்தது – மு.க.ஸ்டாலின்!

சென்னை : சட்டப்பேரவை கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் பதிலுரையாற்றி வருகிறார். அப்போது…

2 hours ago

பெண்களுக்கு எதிரான பாலியல் வழக்கை விசாரிக்க 7 தனி சிறப்பு நீதிமன்றம் – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த திங்கள்கிழமை முதல் தொடங்கிய நிலையில், நேற்று ஐந்தாவது நாளில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள்…

2 hours ago

“இந்திய அணியின் ராணி” ஸ்மிருதி மந்தனா படைத்த புது சாதனை!

குஜராத் : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது அயர்லாந்துக்கு எதிராக  3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட்…

3 hours ago

கேம் சேஞ்சர் திரைப்படம் முதல் நாளில் எவ்வளவு வசூல் தெரியுமா?

டெல்லி : மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியிருந்த கேம் சேஞ்சர் திரைப்படம் ஜனவரி 10 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ஷங்கர்…

4 hours ago