இசையமைப்பாளர் யுவனுடன் பேச ஓர் அறிய வாய்ப்பு! மிஸ் பண்ணிடாதீங்க!
நடிகர் சூர்யா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இவரது படங்கள் மக்கள் மத்தியில் நல்ல பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.
இந்நிலையில், இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் என்.ஜி.கே. இப்படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் இன்று மாலை வெளியாகவுள்ள நிலையில், இயக்குநர் செல்வராகவன் மற்றும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா ஆகிய இருவரும் இன்று மாலை 4 மணிக்கு ட்விட்டர் பக்கத்தில் நேரலையில் ரசிகர்களுடன் உரையாடுவதற்காக சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து, இந்த நேரலை உரையாடலுக்காக, ட்விட்டரில் #ASKNGKTEAM என்ற ஹேஸ்டேக் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நேரடியாக ரசிகர்கள் அவர்களிடம் கேள்விகளை கேட்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.