ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லைக்கா நிறுவனம் தயாரிப்பில் ‘லால் சலாம்’ என புதிய திரைப்படம் தயாராகி வருகிறது. இந்த திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிகர்கள் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் நடிக்கிறார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.
படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்குவதால், படத்தில் நடிகர் ரஜினிகாந்தும் ஒரு முக்கியமான கெஸ்ட் ரோலில் நடிக்கிறார். இதனால் என்னவோ படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்புகள் உள்ளது. சமீபத்தில் தான் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.
இதையும் படியுங்களேன்- இதெல்லாம் எப்படிங்க செட் ஆகும்..? அஜித்திற்கு வில்லனாகும் பிரபல முன்னணி ஹீரோ..!?
இந்நிலையில், படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படத்தில் நடிக்க ஆட்கள் தேவை என படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனம் டிவிட்டரில் அறிவித்துள்ளது. இந்த திரைப்படத்தில் நடிக்க ஆர்வமுள்ள நடிகர்கள் ஆண்கள் , பெண்கள் சிறுவர்கள், சிறுமிகள், அணைத்து வயதினரும் கலந்துகொள்ளலாம்.
சென்னை சாலிகிராமம்,கோல்டன் பாரடைஸ் திருமணக்கூடம் இடத்தில் வைத்து நடிகர்கள், நடிகைகள் தேர்வு நடைபெறுகிறது. வரும் டிசம்பர் 16-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பலரும் தனக்கு விருப்பம் இருக்கிறது என நடிக்க ஆர்வம் உள்ளதாக தெரிவித்து வருகிறார்கள்.
சென்னை : நேற்று மத்திய கல்வி அமைச்சகம் பள்ளி மாணவர்கள் தேர்ச்சி விதிமுறையில் முக்கிய திருத்தம் ஒன்றை கொண்டு வந்தது.…
ராஜஸ்தான்: கோட்புட்லி மாவட்டம் கிராத்புரா கிராமத்தின் பதியாலி தானி என்கிற பகுதியில் 150 அடி ஆழம் உள்ள ஆழ்குழாய் கிணற்றில்…
சென்னை: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 17 பேரை இரண்டு விசைப்படகுகளுடன் இலங்கை கடற்படை கைது செய்துள்ளனர். நெடுந்தீவு…
குஜராத்: இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி, 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட…
ராமேஸ்வரம்: தமிழக மீனவர்களுக்கு எதிரான இலங்கையின் தொடர் கைது நடவடிக்கை, மீனவ குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மீண்டும், எல்லை தாண்டி…
சென்னை: தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு தண்டையார்பேட்டை மெட்ரோ ரயில் சுரங்க…