முன்னாள் முதல்வரின் பேட்டி உட்பட 10 காட்சிகளை நீக்கம் செய்யப்பட்டு, தி கேரளா ஸ்டோரி படத்துக்கு ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது.
மே 5ஆம் தேதி வெளியாக இருக்கும் ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்திற்கு மத்திய திரைப்படத் தணிக்கை வாரியம் (CBFC) ‘A’ சான்றிதழ் வழங்கியுள்ளது. தணிக்கை குழு 10 காட்சிகளை நீக்கியுள்ளதாக கூறப்படுகிறது, அவற்றில் ஒன்று தான் கேரள முன்னாள் முதல்வர் ஒருவரின் பேட்டி.
லதா சீனிவாசன் எழுதிய, இயக்குனர் சுதிப்தோ சென்னின் இயக்கிய இந்தி திரைப்படமான ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தின் டீசர் கடந்த ஆண்டு வெளியிடப்பட்டதில் இருந்தே சர்ச்சையில் இருந்து வருகிறது. மே 5ஆம் தேதி வெளியாகும் இப்படத்திற்கு சென்சார் போர்டு ‘ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது.
இந்நிலையில், மத்திய திரைப்படத் தணிக்கை வாரியம், 10 காட்சிகளை நீக்கிய காட்சிகளில் ஒன்று கேரள முன்னாள் முதல்வர் வி.எஸ்.அச்சுதானந்தன் பேட்டி என்று கூறப்படுகிறது. நீக்கப்பட்டதாக நம்பப்படும் மற்றொரு காட்சியில் அனைத்து இந்து கடவுள்களைப் பற்றிய உரையாடல்கள் மற்றும் பொருத்தமற்ற குறிப்புகள் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் சில டயலாக்குகளும் வெளிப்படையாக மாற்றப்பட்டுள்ளது.
வெளியிட்டிற்கு கடும் எதிர்ப்பு:
தற்போது கேரள அரசும், எதிர்க்கட்சித் தலைவர்களும் படத்தைத் தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் திரைப்பட விமர்சகர்கள் வேறுபட்ட கருத்தை தெரிவித்தனர். பார்வையாளர்கள் இறுதியில் OTT இல் படத்தைப் பார்ப்பார்கள், எனவே அதை தியேட்டர்களில் வெளியிடுவது நல்லது என்ற கருத்தை முன்வைக்கின்றனர்.
உச்சநீதிமன்றம் மறுப்பு:
இப்படம் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் இருப்பதாக கூறி, தி கேரளா ஸ்டோரி படத்திற்கு தடை கேட்டு நிசாம் பாஷா என்பவர் வழக்கு தொடர்ந்தார். இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும், மனுதாரர் நிசாம் பாஷா கேரள மாநில உயர்நீதிமன்றத்தை நாடுமாறு உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
ரூ.1 கோடி பரிசு:
32,000 மலையாளி பெண்கள், ஐஎஸ் தீவிரவாதிகளாக ஆக்கப்பட்டவர்கள் என்பதை நிரூபிப்பவர்களுக்கு ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும் என கேரளாவில் உள்ள முஸ்லிம் யூத் லீக் அறிவித்துள்ளது.
சென்னை : மதகஜராஜா திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. 12-ஆண்டுகளுக்கு பிறகு இந்த படம்…
ராமேஸ்வரம்: தமிழ்நாட்டில் இருந்து மீன் பிடிக்க செல்லும் மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக கூறி இலங்கை கடற்படையினர் சிறை…
டெல்லி: ஸ்பேடெக்ஸ் இரட்டை விண்கலன்களை ஒருங்கிணைக்கும் செயல்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில், தற்பொழுது விண்கலன்களுக்கு இடையேயான தூரம் 15 மீட்டராக…
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் தனது மனைவி துர்கா ஸ்டாலின் உடன் பொங்கல்…
இந்தியாவில் நடைபெறும் மகா கும்பமேளாவின் முக்கியத்துவம் பற்றியும் அதன் வரலாற்றைப் பற்றியும் இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :12…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் 2 நாட்கள் நடைபெறும் பெண்கல்வி குறித்த மாநாடு தொடங்கியுள்ளது. இஸ்லாமிய நாடுகளில் உள்ள…