ஒருவழியாக முடிஞ்சது வழக்கு! நிம்மதி பெருமூச்சு விட்ட நடிகர் தனுஷ்!
Dhanush கடந்த 2015-ஆம் ஆண்டு மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்த கதிரேசன் – மீனாட்சி என்ற தம்பதி நடிகர் தனுஷ் தன்னுடைய சொந்த மகன் என்றும் பள்ளிக்கூடம் படித்துக்கொண்டிருந்த சமயத்தில் வீட்டை விட்டு ஓடி விட்டதாகவும் பிறகு அவரை கஸ்தூரி ராஜா வளர்த்துள்ளார் என்றும் தனுஷ் தங்களுக்கு மாதம் உதவித்தொகை வழங்கவேண்டும் என்று வழக்கு தொடர்ந்து இருந்தார்கள்.
READ MORE – ஒரு வழியா குறைச்சிட்டாங்க போல! பழைய லுக்கில் அனுஷ்கா! குவிய போகும் பட வாய்ப்புகள்?
அதன்பிறகு இந்த வழக்கை மதுரை மாவட்ட நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனையடுத்து, இந்த வழக்கு விசாரணையின் போது நடிகர் தனுஷ் தனது பிறப்பு மற்றும் பள்ளி மாற்றுச் சான்றிதழ்களை தாக்கல் செய்தும் இருந்தார். அதன்பின், தனுஷ் போலியான பிறப்பு மற்றும் பள்ளி மாற்றுச் சான்றிதழ்களை தாக்கல் செய்து இருந்ததாக கூறி கதிரேசன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தும் இருந்தார்.
READ MORE – எம்மாடி திருமணம் மட்டுமே வேண்டவே வேண்டாம்! அலறும் நடிகை ஆண்ட்ரியா!
இந்நிலையில், இந்த வழக்கை விசாரணை செய்த உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கை தள்ளுபடி செய்துள்ளது. மனுவை விசாரணை செய்த நீதிபதி ராமகிருஷ்ணன் மனுதாரர் கொடுத்த மனு உள்நோக்கத்துடன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றும், எவ்வித ஆதாரங்களும் இதில் இல்லை எனவும் இது ஒரு அபத்தமான வழக்கு என்றும் கூறி வழக்கை தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டார். கடந்த சில ஆண்டுகளாக இந்த வழக்கு விசாரணை முடியாமல் இருந்த நிலையில், ஒரு வழியாக தற்போது வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதால் தனுஷ் தரப்பு பெருமூச்சு விட்டுள்ளது.