படமே இல்லாத நயன்தாராவுக்கு பம்பர் வாய்ப்பு?

Nayanthara : பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் நயன்தாராவுக்கு பாலிவுட்டில் படம் ஒன்றில் நடிக்கும் வாய்ப்பு வந்துள்ளதாக தகவல்.
நயன்தாராவின் மார்க்கெட் இப்போது எப்படி இருக்கிறது என்பது பற்றி சொல்லி தான் தெரியவேண்டும் என்று இல்லை. அந்த அளவிற்கு சோகமான நிலையில் தான் அவருடைய மார்க்கெட் இருக்கிறது. அவருடய நடிப்பில் கடைசியாக வெளியான படங்கள் எல்லாம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் தோல்வியை சந்தித்து இருக்கிறது.
குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் கடைசியாக அவருடைய நடிப்பில் வெளியான அன்னபூரணி படம் ரசிகர்களுக்கு மத்தியில் சரியான விமர்சனத்தை பெறவில்லை எதிர்பார்ப்பை மட்டும் எகிற வைத்துவிட்டு படம் வசூல் ரீதியாக தோல்வியை சந்தித்து இருக்கிறது. அந்த தோல்வியை தொடர்ந்து அடுத்ததாக மண்ணாங்கட்டி படத்தில் நடித்து வருகிறார்.
இயக்குனர் டியூட் விக்கி இயக்கத்தில் உருவாகி வரும் இந்த ஒரு தமிழ் படத்தில் மட்டும் தான் நயன்தாரா நடிக்க கமிட் ஆகி இருக்கிறார். இந்த படத்திற்கு பிறகு வேறு எந்த தமிழ் திரைப்படத்திலும் நயன்தாரா நடிக்க கமிட் ஆகவில்லை. பெண்களை மையப்படுத்திய படமாக இது உருவாகி வருகிறது. விரைவில் இந்த திரைப்படத்திற்கான ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்படவுள்ளது.
இந்த நிலையில், பட வாய்ப்புகளே இல்லாமல் இருக்கும் நடிகை நயன்தாராவுக்கு பாலிவுட் சினிமாவில் இருந்து ஒரு பம்பர் வாய்ப்பு வந்துள்ளது. இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கும் படத்தில் நடிகை நயன்தாரா முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே, நயன்தாரா பாலிவுட்டில் ஷாருக்கானுக்கு ஜோடியாக ஜவான் படத்தில் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்தியா vs பாகிஸ்தான் : நதிநீர் நிறுத்தம், மருத்துவ சேவை நிறுத்தம்., பாக். வான்வழி தடை!
April 24, 2025
பஹல்காம் தாக்குதல் : “முஸ்லீம்கள் – இந்துக்களை தனித்தனியாக பிரிக்க சொன்னார்கள்?” தந்தையை இழந்த சிறுவன் பகீர் தகவல்!
April 24, 2025
பாக்., தூதரக அலுவலகத்திற்குள் கொண்டு செல்லப்பட்ட கேக்.! மீடியா முன் ஷாக் கொடுத்த நபர்…,
April 24, 2025