பாலிவுட் நடிகர் ரன்தீப் ஹூடா தனது காதலியான நடிகை மற்றும் மாடல் அழகியான லின் லைஷ்ராமை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
பாலிவுட் நடிகர் ரன்தீப் ஹூடா மற்றும் அவரது காதலியான லின் லைஷ்ராம் ஆகியோர் மணிப்பூரின் தலைநகரான இம்பாலில், அவர்களது நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில், மெய்தி இன பாரம்பரிய முறைப்படி திருமணம் நடைபெற்றது.
இவர்கள் இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்ட வந்த நிலையில், இறுதியாக இருவீட்டாரின் சம்மத்துடன் நேற்று திருமணம் செய்து கொண்டனர். தற்பொழுது, திருமணத்தின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இணையுமா அஜித் – வெற்றிமாறன் கூட்டணி? விட்டதை பிடிக்க மாஸ்டர் பிளான் போட்ட தயரிப்பாளர்.!
இந்நிலையில், பிரியங்கா சோப்ரா, நீனா குப்தா, சயானி குப்தா, விஜய் வர்மா மற்றும் ஆஹானா கும்ரா போன்ற பல பிரபலங்கள் இந்த ஜோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும், மணிப்பூர் கலாச்சாரத்தின் படி, அவர்கள் உடை அணிந்து இருந்தனர். ஆனால், அந்த உடைகள் குறித்த சிலர் வர்ணித்தாலும், சிலர் ட்ரோல் செய்ய தொடங்கினர்.
நடிகர் ரன்தீப் ஹூடா பாலிவுட்டில் ஜன்னத்-2, ஜிஸிம்-2, காக்டெய்ல், கிக், ரசியா, ஹைவே, சர்ப்ஜித் போன்ற படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானார். ரன்தீப் அடுத்ததாக சாவர்க்கரின் வாழ்க்கை வரலாற்றில் நடிக இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தில் அவர் கதாநாயகனாக மட்டும் நடிக்காமல் படத்தையும் அவர் தான் இயக்க போகிறார் என்று சொல்லப்படுகிறது
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…