“எல்லோருக்கும் மிகப்பெரிய நன்றி!” அஜித் குமார் டீம் நெகிழ்ச்சி!

பயிற்சி முதல் வெற்றி மேடை வரை ஆதரவளித்த அனைவருக்கும் மிகப்பெரிய நன்றி என அஜித்குமார் ரேஸிங் அணி சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Thank You note from Ajith Kumar Racing Team

சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா, நடிப்பை தாண்டி கார் பந்தயத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார். ஏற்கனவே
அஜித்குமார் ரேஸிங் அணி, 24H துபாய் 2025-ல் மூன்றாம் இடத்தையும், 12H முகெல்லோ 2025-ல் மூன்றாம் இடத்தையும் பெற்று அசத்தியது.

அதனை தொடர்ந்து, SRO மோட்டார்ஸ்போர்ட்ஸ் குழுமத்தால் நடத்தப்படும் GT4 ஐரோப்பிய தொடர் சாம்பியன்ஷிப் போட்டியிலும் அஜித்குமார் ரேஸிங் அணி பங்கேற்றது. இதில், உலகப்புகழ்பெற்ற சர்க்யூட் டி ஸ்பா-பிரான்கோர்சாம்ப்ஸ் மைதானத்தில் ஏப்ரல் 20-ம் தேதி நடைபெற்ற GT4 ஐரோப்பிய கார் பந்தயத்தில் அஜித்குமார் ரேஸிங் அணி கலந்துகொண்டது.

இந்தப் பந்தயத்தில் 46 கார்கள் பங்கேற்றன, இதில் அஜித் குமாரின் அணி சிறப்பாக விளையாடி 2-வது இடத்தை பிடித்தது. இது அஜித்குமார் அணியின் 3வது வெற்றியாகும். இதற்கு ரசிகர்கள் , பிரபலங்கள் என பலரும் தங்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், அஜித்குமார் ரேசிங் அணி சார்பாக எல்லோருக்கும் பெரிய நன்றி என ஒரு செய்தி அஜித்குமார் தரப்பில் இருந்து அவரது மேனேஜர் செய்தி வெளியிட்டுள்ளார்.

அதில், பயிற்சியில் இருந்து வெற்றி மேடை வரை நீங்கள் இல்லாமல் எங்களால் இதைச் செய்திருக்க முடியாது. ஸ்பாவில் P2, மற்றும் அதை சாத்தியமாக்கிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். எங்கள் ராக்ஸ்டார் குழுவினர் மற்றும் கூட்டாளர்கள் அனைவருக்கும் நன்றி என பதிவிடப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்