தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வரும் சிம்பு, நீண்ட இடைவெளிக்கு பிறகு மாநாடு படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்துவிட்டார். என்னதான் அவர் நீண்ட ஆண்டுகளாக படம் நடிக்காமல் கூட இருந்தாலும் அவருக்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டம் குறையவே இல்லை. அதற்கு உதாரணம் மாநாடு வெற்றியை கூறலாம்.
இவரது நடிப்பில் நீண்ட ஆண்டுகளாக ரிலீஸ் ஆகாமல் இருக்கும் திரைப்படம் மஹா. இது ஹன்ஷிகாவின் 50-வது திரைப்படமாகும். படத்தில் சிம்பு கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். ஒரு வழியாக நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு இந்த படம் வரும் ஜூலை 22-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
படத்தில் சிம்பு நடித்தது என்னவோ கெஸ்ட் ரோலில் தான். ஆனால், அவரது ரசிகர்கள் கொண்டாடுவதை பார்த்தால் படமே சிம்பு படம் போல் மாதிரி தெரிகிறது. அந்த அளவிற்கு படத்தை பார்க்க ஆவலுடன் காத்துள்ளனர்.
இந்த நிலையில் படம் வெளியாவதை முன்னிட்டு மதுரையை சேர்ந்த சிம்பு ரசிகர்கள் மஹா படம் வெற்றிபெறுவதற்காக 1000 அடி நீளத்திற்கு பேனர் வைத்துள்ளனர். அந்த பேனரை மதுரையில் உள்ள ஒரு மிகப்பெரிய பாலத்தில் வைத்துள்ளனர். அதற்கான புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதுவரை எந்த தமிழ் நடிகருக்கும் இத்தனை அடி உயரத்தில் பேனர் வைத்ததே இல்லை. ஆனால், சிம்பு ரசிகர்கள் முதன் முறையாக 1000 ஆதி பேனர் வைத்து புதிய சாதனையை படைத்துள்ளனர்.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…