10 நிமிட குறும்படம் இருக்கு! அது தான் LCU-வின் தொடக்கம்- நடிகர் நரேன்!
லோகேஷ் கனகராஜ் சினிமாவில் lCU என்ற பாணியை உருவாக்கி அதன் மூலம் தன்னுடைய படங்களின் காட்சிகளை ஒன்றாக இணைத்து படங்களை இயக்கி கொடுத்து வருகிறார். அந்த வகையில் இவருடைய LCU-வின் கீழ் கைதி, விக்ரம், லியோ ஆகிய படங்கள் வருகிறது. இதில் அவருடைய இயக்கத்தில் கைதி 2 மற்றும் விக்ரம் 2, லியோ 2 படங்கள் எல்லாம் உருவாகவும் இருக்கிறது.
இதனையடுத்து, இந்த LCU எப்படி தொடங்கியது என்பது குறித்து ஒரு குறும்படம் ஒன்றும் தயாராகி உள்ளதாம். அந்த குறும்படம் யூடியூபில் வெளியாகவுள்ளதாகவும் பிரபல நடிகரான நரேன் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட போது தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய நரேன் ” லோகேஷ் கனகராஜும் நானும் இணைந்து lcuவை வைத்து குறும்படம் ஒன்றை எடுத்திருக்கிறோம்.
பரபரப்பை கிளப்பிய அந்த மாதிரி வீடியோ! விளக்கம் கொடுத்த லோகேஷ் கனகராஜ்!
அந்த குறும்படம் தான் LCU எப்படி தொடங்கியது என்பதற்கான ஒரு புள்ளி.லோகேஷ் கனகராஜ் கைதி 2 படத்தை எடுத்துமுடித்து அந்த கைதி 2 படம் வெளியாவதற்கு முன்பு நானும் லோகேஷ் சேர்ந்து எடுத்த அந்த குறும்படம் யூடியூப் அல்லது எதாவது ஓடிடியில் வெளியாகும்” எனவும் நடிகர் நரேன் தெரிவித்துள்ளார். இந்த தகவலை பார்த்த ரசிகர்கள் தற்போது உற்சாகத்தில் உள்ளனர்.
மேலும், லோகேஷ் கனகராஜ் கடைசியாக விஜய்யை வைத்து லியோ திரைப்படத்தை இயக்கி இருந்தார். இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ரஜினிகாந்தை வைத்து அவருடைய 171-வது திரைப்படமான தலைவர் 171 படத்தை இயக்கவுள்ளார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதல் தொடங்கலாம் எனவும் கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.