‘A’ படத்தில் நடிக்கும் நடிகை நயன்தாரா..! அதிச்சியில் திரையுலகம்..!
தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் நம்பர் 1 இடத்தில் இருப்பவர் நடிகை நயன்தாரா. இவர் சிறு இடைவேளைக்கு பிறகு மீண்டும் தமிழ் நடிக்க வந்துள்ளார்.தமிழ் ரசிகர்களை இவரை லேடி சூப்பர் ஸ்டார் என்று ஏற்றுக்கொண்டுள்ளனர்.
நடிகை நயன்தாரா சமீப காலமாக, ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில், சமீபத்தில் வெளியான் அறம் படம் இவருக்கு ஹிட் படமாக அமைந்தது.இந்த படம் பலவிருதுகளை இவருக்கு பெற்றுத்தந்தது.
இந்நிலையில், கோலமாவு கோகிலா என்ற படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தில் இவருடன் பிரபல நடிகர்கள் யோகிபாபு, சரண்யா பொன்வண்ணன், தொலைக்காட்சி பிரபலங்களான அறந்தாங்கி நிஷா, ஜாக்குலின், நவீன்குமார் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.இந்தப்படத்தின் டீசர் தற்போது வெளிவந்துள்ளது .இது அவரது ரசிகர்களிடையியே பெரும் வரவேற்பை பெற்றது.
ரிலீசுக்கு தயார் நிலையில் இருக்கும் இந்த படத்தினை சென்சாருக்கு அனுப்பிய படக்ழு கிளீன் U சான்றை எதிர்பார்த்து காத்திருந்தது. ஆனால், படத்தை பார்த்த படக்குழு கோலமாவு கோகிலாவுக்கு A சான்று கொடுத்துள்ளனர்.ஏனெனில் படத்தில் இவர் கஞ்சா விற்பது போல நடித்துள்ளார் என்றும் வேறு பல காரணங்களுக்காகவும் கொடுத்துள்ளனர் . இது படக்குழுவை ஷாக் ஆக்கியது. தொடர்ந்து, சில கட்சிகளை கட் செய்த பிறகு UA என்ற சான்றினை வழங்கி உத்தரவிட்டுள்ளது தணிக்கை குழு