விஜய் சேதுபதி – த்ரிஷா நடிப்பில் வெளியான 96 படத்தின் நூறாவது நாள் கொண்டாட்டத்தின் புகைப்பட தொகுப்பு!!!
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா நடிப்பில் வெளியாகி அனைவரது மத்தியிலும் நல்ல படம் என பெயரெடுத்து வெற்றி பெற்ற திரைப்படம் 96! இந்த படத்தை பிரேம் குமார் என்பவர் இயக்கி இருந்தார். இப்படத்தினை நந்தகோபால் தயாரித்திருந்தார். இப்படத்திற்கு கோவிந்தா வசந்தா இசையமைத்து இருந்தார்.
இப்படத்தின் பாடல்கள், பிண்ணனி இசை, பள்ளிப்பருவ காதல் காட்சிகள் என அனைத்தும் ரசிகர்களுக்கு பிடித்து போய்விட்டது. இப்படம் 36வது நாளே தொலைகாட்சியில் போடப்பட்டது. இருந்தும் இப்படம் சில தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருந்தது.
இந்நிலையில் இப்படத்தின் நூறாவது நாள் கொண்டாட்டம் நேற்று கொண்டாடப்பட்டது. அதில் பணியாற்றிய கலைஞர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டுள்ளது.
DINASUVADU