நடிகர் விஜய் சேதுபதி நாயகனாக நடித்த படம் “96”.இந்த படத்தில் நாயகியாக நடிகை த்ரிஷா நடித்துள்ளார். இந்நிலையில் இந்த படம் கடந்த ஆண்டு வெளியாகி விமர்சன ரீதியாகவும் ,வசூல்ரீதியாகவும் மாபெரும் சாதனை படைத்தது. இந்த படத்தை இயக்குநர் ப்ரேம் குமார் இயக்கியுள்ளார்.
இந்த படத்திற்காக நடிகை த்ரிஷா சிறந்த நடிகைக்கான விருதை வென்றுள்ளார்.இந்நிலையில் இந்த படம் 100 தாண்டி வெற்றிகரமாக பல திரையரங்குகளில் ஓடி சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இப்படம் கன்னட மற்றும் தெலுங்கு மொழிகளில் ரீ-மேக் செய்யப்பட்டு வருகிறது.
ஆண்டு தோறும் தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகரும் இயக்குநருமான மாருதிராவ்வின் மகன் கொல்லப்புடி ஸ்ரீனிவாஸ் நினைவாக கொல்லப்புடி ஸ்ரீனிவாஸ் விருது வழங்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் தற்போது இந்த விருது 96 படத்திற்காக இயக்குநர் ப்ரேம் குமார் பெற இருக்கிறார்.இந்த விருதுடன் 1.5 லட்சம் ரூபாய் பரிசுத்தொகையாக வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருது வரும் ஆகஸ்ட் மாதம் 12ம் தேதி வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…