96 பட தயாரிப்பாளருக்கு ‘ரெட் கார்ட்’?! நடிகர் சங்கம் அதிரடி அறிவிப்பு!!
விஜய் சேதுபதி நடித்த 96 திரைப்படத்தை தயாரித்தவர் S.நந்தகோபால். இவர் ஏற்கனவே விஷால் நடித்த துப்பறிவாளன் திரைப்படத்தையும் , விக்ரம்.பிரபு நடித்திருந்த வீரசிவாஜி படத்தையும் தயாரித்திருந்தார். இந்த படங்களில் நடித்த நடிகர்களுக்கு சம்பள பாக்கியை S.நந்தகோபால் தராமல் படத்தை வெளியிட்டுள்ளார்.
இதனை குறித்து 96 பட வெளியீட்டின் போது விஜய் சேதுபதியே தான் இந்த பட வெளியீட்டிற்காக பலிகடா ஆக்கப்பட்டேன் என கூறி, தனது சம்பளத்தையும் பட வெளியீட்டிற்காக விட்டு கொடுத்தார் என கூறப்படுகிறது.
இந்நிலையில் இதற்கு நடவடிக்கை எடுக்க நடிகர் சங்கம் முடிவு செய்து, தற்போது ஓர் அறிக்கை ஒன்றை வெளகயிட்டுள்ளது. அதில் துப்பறிவாளன், வீரசிவாஜி, 96 படங்களின் வெளியீட்டின் போது ரிலீஸ் நெறுக்கடியை காரணம் காட்டி சம்பளம் தராமல் படத்தை வெளியிட்டதற்காக இனி வரும் காலங்களில் இது போன்று நடக்கும் பட தயாரிப்பு நிறுவனங்களுக்கு நடிகர் சங்கத்தை சேர்ந்த நடிகர் நடிகைகள் அந்த பட தயாரிப்பு நிறுவனத்தின் நிகழச்சிக்கோ, படத்திற்கோ ஒத்துழைப்பு தரவேண்டாம் என தென்னிந்திய நடிகர் சங்கம் கேட்டுக்கொண்டது. Source CINEBAR.IN
DINASUVADU