91வது ஆஸ்கர் விருது:சிறந்த நடிகை ஒலிவியா கோல்மன்,சிறந்த நடிகர் ரமி மாலிக் !!
- இந்த ஆண்டு 91வது ஆஸ்கர் திரைப்பட விருது வழங்கப்பட்டு வருகிறது.
- சிறந்த நடிகை மற்றும் நடிகருக்கான விருது வழங்கப்பட்டது.
சினிமா துறையில் உயரிய விருதான ஆஸ்கார் விருது ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகின்றது.அதில் சிறந்த திரைப்படம் , நடிகர்கள் , நடிகைகள் , தொழில்நுட்ப கலைஞர்கள் , இசையமைப்பாளர்கள் என சினிமா துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கப்படும்.
இந்நிலையில் இந்த ஆண்டுக்கு ஆஸ்கர் விருது பெற இருக்கும் திரைப்படம் , நடிகர்கள் , இயக்குனர் , நடிகைகள் உட்பட பலரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டது.இது 91வது ஆஸ்கர் திரைப்பட விருது விழா நடைபெற்றுவருகிறது.
பரிந்துரைக்கப்பட்ட சிறந்த நடிகைகள் வரிசை:
யாலிட்ஸா அபாரிசியோ,
கிளென் க்ளோஸ்,
ஒலிவியா கோல்மன்,
லேடி காகா,
மெலிசா மெக்கார்த்தி,
தேர்வு செய்யப்பட்டவர்:
இதில் சிறந்த நடிக்கைக்கான விருதை The Favourite படத்துக்காக ஒலிவியா கோல்மன் (Olivia Colman) வென்றுள்ளார்
பரிந்துரைக்கப்பட்ட சிறந்த நடிகர்கள் வரிசை:
கிறிஸ்டியன் பேல்,
பிராட்லி கூப்பர்,
ரமி மாலிக்,
விகோ மார்டென்சன்,
வில்லியம் டேஃபோ
தேர்வு செய்யப்பட்டவர்:
இதில் BOHEMIAN RHAPSODY படத்தில் நடித்த ரமி மாலிக் (RAMI MALEK) சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை வென்றுள்ளார்.