90’s கிட்ஸ் அறிந்த சம்பவகாரன் ஷங்கர்.! இந்திய சினிமா திரும்பி பார்த்த ஹிட் லிஸ்ட்.!

ஷங்கர் : தமிழ் சினிமாவில் பிரமாண்ட இயக்குனர் என்று அழைக்கப்படும் ஷங்கர் என்ற பெயரை கேட்டவுடன் இப்போது இருக்கும் 2k-கிட்ஸ்க்கு நினைவுக்கு வருவது ஐ மற்றும் 2.O ஆகிய படங்கள் தான். ஆனால், இந்த படங்களை இயக்குவதற்கு முன்பே அதாவது 90’s கிட்ஸ் அறிந்த சம்பவகாரர் ஷங்கர் பற்றி கேள்விப்பட்டாலே 2k கிட்ஸ் ஆச்சரியப்படுவார்கள். அப்படி என்ன செய்தார் ஷங்கர் என்பதை இந்த செய்தி குறிப்பில் காணலாம்.
அந்த சமயம் இயக்குனர்கள் எல்லாம் கமர்சியல் பாணி, கதை சொல்லும் பனி என படங்களை இயக்கி ஹிட் கொடுத்துக்கொண்டிருந்த சமயத்தில் கதைக்குள் ஒரு மெசேஜ் வைத்து அந்த கதையில் பிரமாண்டத்தை சேர்த்து பிரமாண்ட கமர்சியல் படத்துடன் கருத்துக்களை உட்புகுத்தி படங்களை கொடுத்து தனக்கென்று ஒரு பாணியை உருவாக்கினார் ஷங்கர். அர்ஜுனை வைத்து முதல் படமான ஜென்டில் மேன் எனும் சூப்பர் வெற்றியை தொடர்ந்து பிரபுதேவாவை வைத்து காதலன் படத்தினை இயக்கினார்.
அத பிறகு அப்போதைய டாப் ஸ்டார் பிரசாந்தை வைத்து ஜீன்ஸ் படத்தினை இதுவரை இல்லாத அளவுக்கு பிரமாண்ட பட்ஜெட் என களமிறங்க அதுவும் மெகா ஹிட் ஆகியது, அடுத்ததாக மீண்டும் தனது முதல் பட நாயகன் அர்ஜுனை வைத்து முதல்வன் படத்தினை இயக்கினார். அதுவரை இயக்குனராக ஹிட் கொடுத்துக்கொண்டிருந்த ஷங்கர் முதல்வன் படத்தை தயாரிக்கவும் செய்து தயாரிப்பாளராக எண்டரி கொடுத்தார். படமும் பெரிய அளவில் பேசப்பட்டு மெகா ஹிட் ஆனது. என்னதான் தொடர்ச்சியாக மெகா ஹிட் படங்களை கொடுத்தாலும் மற்ற மொழிகளுக்கு சென்று படங்களை இயக்காமல் தமிழ் மொழியில் மட்டும் தான் படம் எடுப்பேன் என்று ஷங்கர் செயல்பட்டு வந்தார்.
இருப்பினும், முதல்வன் படம் மிகப்பெரிய ஹிட் ஆகி இருந்த காரணத்தால் ஹிந்தியில் அணில் கபூரிடம் அவருக்கு கால் வந்து படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்து கொடுக்கும்படி கேட்டனர். இதன் காரணமாக ஹிந்திக்கு சென்று முதல்வன் படத்தினை ஹிந்தியில் நாயக் என்ற பெயரில் ரீமேக் செய்தார். பிறகு மீண்டும் தமிழுக்கு திரும்பிய ஷங்கர் பாய்ஸ், அந்நியன், சிவாஜி, எந்திரன்,நண்பன், உள்ளிட்ட படங்களை இயக்கினார்.
ஷங்கர் அடுத்ததாக கமல்ஹாசனை வைத்து இந்தியன் 2 படத்தினை இயக்கி முடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் ஜூலை 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. எனவே, ஷங்கர் படங்களில் வழக்கமாக இருக்கும் அட்டகாசமான கதையும் பிரமாண்டமும் இந்தியன் 2-வில் இருக்குமா? என்று 80’s முதல் 2K கிட்ஸ் வரையில் அனைத்து தரப்பு ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர்.