கர்ணன் படத்தின் 90 சதவீத படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துவிட்டது! நடிகர் தனுஷ் வெளியிட்ட தகவல்!
கர்ணன் படத்தின் 90 சதவீத படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துவிட்டது.
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் கர்ணன். இந்த படத்தில் நடிகர் தனுஷ் நடித்து வருகிறார். இந்த படத்தில் தனுசுக்கு ஜோடியாக, மலையாள நடிகை ரெஜிஷா நடித்து வருகிறார். மேலும், இப்படத்தில், யோகி பாபு, மலையாள நடிகர் லால், நடிகை லட்சுமி பிரியா ஆகியோர் நடிக்கின்றனர்.
இந்நிலையில், இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 5-ம் தேதி தொடங்கியது. திருநெல்வேலி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில், நடிகர் தனுஷ் தனது ட்வீட்டர் பக்கத்தில், 90 சதவிகித படப்பிடிப்புகள் நிறைவடைந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.
That’s a wrap for karnan second schedule. 90 percent of the shoot completed. pic.twitter.com/BDIXQVgq8e
— Dhanush (@dhanushkraja) February 24, 2020