சுந்தர் சி. இயக்கத்தில் 2014ஆம் ஆண்டு செப்டம்பர் 19 அன்று இதே நாளில் வெளியான “அரண்மனை” திரைப்படம் வெளியாகி, இன்றுடன் 9 வருடங்கள் நிறைவு செய்துள்ளது. ஒரு பேய் திரைப்படத்தை வித்தியாசமான ஜானரில் எடுக்க யோசித்து, நகைச்சுவை திகில் திரைப்படமாக வழங்கிய இந்த திரைப்படத்தில், சுந்தர் சி, வினய், ஹன்சிகா, மோட்வானி, ஆண்ட்ரியா, லட்சுமி ராய், சந்தானம், கோவை சரளா, மனோபாலா, நிதின் சத்யா என பலர் நடித்துள்ளனர்.
ராகவா லாரன்ஸின் காஞ்சனா படத்தின் யுத்தியை கையாண்ட சுந்தர் சி, காஞ்சனா திரைப்படத்தை போல் ‘அரண்மனை’ படத்தை பார்ட் 3 வரை எடுத்துள்ளார். இப்பொழுது, அதன் 4வது பாகத்திற்கான வேலையை தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து, சித்தார்த், ஹன்சிகா, பூனம் பஜ்வா, திரிசா, சூரி, கோவை சரளா, மனோபாலா ஆகியோர் நடிப்பில் ‘அரண்மனை 2’ என்றும், ஆர்யா, ராஷி கண்ணா, ஆண்ட்ரியா, மனோபாலா உட்பட பல முக்கிய பிரபலங்களின் நடிப்பில் ‘அரண்மனை 3’ என்றும் வெளியானது. ஆனால், முதல் பாகத்தைப் போல 2 மற்றும் 3ஆம் பாகம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், முதல் பாகத்தை அப்போவே 12 கோடி ரூபாயில் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் எதிர்பாராத வெற்றி பெற்று தந்தது என்றே சொல்லலாம். அட ஆமாங்க… வெறும் ரூ.12 கோடியில் எடுக்கப்பட்ட இப்படம் பாக்ஸ் ஆபிஸில் 60 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்தது. அதுபோல், பெட்ரோமாக்ஸ் லைட் என்ற பாடலை வழங்கி ரசிகர்களை பெரிதும் ஈர்த்தார். இந்த பாடல் வந்தபோது, பட்டிதொட்டி எங்கும் ஒலித்தது.
இப்படி, ஒரு பேய் படத்தில் திகில் எந்த அளவுக்கு இருக்கிறதோ அதே அளவுக்கு காமெடியும் கலந்திருக்கும் ஒவ்வொரு காட்சிகளும் காமெடியை புகுத்தி நேர்த்தியாக கையாண்டு இருப்பார் சுந்தர் சி. சொல்ல போனால், படம் முழுக்க பார்த்தோம் என்றால் சிரித்து சிரித்து கண்ணீரே வந்துவிடும்.
கதைப்படி, ஜமீன்தார் குடும்ப வாரிசுள் ஒரு அரண்மனையை விற்க முயற்சி செய்கிறார்கள். அந்த வாரிசுகள் கையெழுத்திட்டால் மட்டுமே, அந்த அரண்மனையை விற்கமுடியும் என்பதால் அனைவரும் ஒன்று சேர்ந்து, அரண்மனையை விற்பதற்காக பத்திரம் ரெடியாகும் வரை அரண்மனையில் தங்க முடிவு செய்கிறார்கள்.
பின்னர், அரண்மனையில் பேய் மர்மம் இருப்பதை அனைவரும் அறிய, அந்த பேய் எதற்காக ஆண்ட்ரியாவின் உடலில் புகுந்திருக்கிறது. இறுதியில், அந்த பேயின் பிடியில் இருந்து அனைவரும் மீண்டார்களா என்பதை நகைச்சுவை கலந்த திகிலுடன் தரமாக எடுத்திருக்கிறார் இயக்குனர்.
சென்னை : தைப்பொங்கல் நாளின் மறுநாள் மாட்டுப்பொங்கல் பண்டிகை தமிழர்களால் கொண்டாட்டப்பட்டு வருகிறது. இந்த நாளில் உழவர்களின் நண்பனாக திகழும்…
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டிகள் பல இடங்களில் நடைபெற்று வருகிறது. நேற்று மதுரை மாவட்டம் அவனியாபுரம்…
தெலுங்கானா : மாநிலம் ஹைதராபாத் - வாரங்கல் நெடுஞ்சாலையில் வியாழக்கிழமை அதிகாலை நடந்த ஒரு துயரமான சாலை விபத்து சம்பவத்தில் 2…
பீதர்: கர்நாடகா மாநிலம் பீதர் மாவட்டத்தில் ஏ.டி.எம் இயந்திரத்தில் நிரப்பப் பணம் எடுத்துச் சென்றவர்கள் மீது பட்டப்பகலில் மர்ம நபர்கள்…
சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 'வணங்கான்' திரைப்படம் ஜனவரி 10ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.…
டெல்லி : அடுத்த மாதம் சாம்பியன்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடர் தொடங்க உள்ளது. இந்த போட்டியில் பங்கேற்கும் 8…