தென்னிந்திய நடிகர் சங்கத்தின் அறங்காவலர்களாக கமல்ஹாசன் உட்பட 9 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நடிகர் சங்க தேர்தல்
நடிகர் சங்க தேர்தலில் பதிவான வாக்குகள் ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபன் அவர்கள் முன்னிலையில், கடந்த இரண்டு தினங்களுக்கு முன் எண்ணப்பட்டது. பின்னர்,நடிகர் தேர்தல் முடிவுகள் வெளியாகிய நிலையில்,பாண்டவர் அணி சார்பாக தலைவர் பதவிக்கு போட்டியிட்ட நாசர் வெற்றி பெற்றுள்ளார்.
பாண்டவர் அணி சார்பில் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட விஷால் வெற்றி பெற்றுள்ளார்.மேலும்,அதே அணி சார்பில் பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட கார்த்தி,துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட கருணாஸ் மற்றும் பூச்சி முருகன் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
பதவியேற்பு
இந்நிலையில், தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற புதிய நிர்வாகிகள் நேற்று பதவியேற்றனர். அதன்படி, நாசர் நடிகர் சங்க தலைவராகவும், பொதுச்செயலாளராக விஷாலும் மற்றும் வெற்றி பெற்ற மற்ற நிர்வாகிகளும் பதவியேற்று கொண்டனர்.
அறங்காவலர்கள் நியமனம்
இந்த நிலையில், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் அறங்காவலர்களாக கமல்ஹாசன் உட்பட 9 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். நிர்வாக குழுவில் இருந்து நாசர், விஷால், கார்த்தி உள்ளிட்டோர் அறங்காவலர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். பொதுக்குழுவில் குழுவில் இருந்து கமல்ஹாசன், பூச்சி முருகன், சச்சு ஆகியோரும், செயற்குழுவில் இருந்து ராஜேஷ், லதா சேதுபதி, கோவை சரளா ஆகியோரும் அறங்காவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியை…
சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…
டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…