தல ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கான நாள் இன்று! #8YrsOfIngeniousMANKATHA !

2007ஆம் ஆண்டு வெளியான பில்லா படத்தின் வெற்றியை அடுத்து தல அஜித்தின் மாபெரும் வெற்றிப்படத்திற்க்காக தல ரசிகர்கள் கிட்டத்தட்ட 4 வருடம் தவமிருந்தனர். அந்த காத்திருப்பிற்க்கு பலனாக அஜித் – இயக்குனர் வெங்கட் பிரபு கூட்டணி மங்காத்தா எனும் மாபெரும் கொண்டாட்டத்தை ரசிகர்களுக்கு பரிசளித்தது.
மேலும் இப்படம் தல அஜித்தின் 50வது படமென்பது கூடுதல் சிறப்பு. தனது 50வது படத்தில் நடித்த மற்ற நடிகர்களுக்கும் நடிக்க காட்சிகள் அதிகமாக ஒதுக்கி அவர்களுக்காக பாடல்கள் வைத்து அவர்களையும் கொண்டாட வைத்தவர் தல அஜித்.
இப்படத்தினை பற்றி பேசுகையில் யுவனின் தெறிக்கும் பின்னணி இசையை குறிப்பிடாமல் இருக்க முடியாது. இன்றளவும் பலரது ரிங்க்டோனாக ஒலித்து கொண்டிருக்கிறது. பாடல்கள் ஆட்டம் போட ஒன்று, இதமாக கேட்க ஒன்று, அசைபோட ஒன்று, கிக்காக ஒன்று என மாஸ் காட்டினார் யுவன்.
படத்தில் தல அஜித்தின் முதல் காட்சி, இடைவெளி காட்சி இறுதி காட்சி என ரசிகர்களை அடுத்தடுத்து கொண்டாட வைத்து இருந்தார் இயக்குனர் வெங்கட் பிரபு. முழுக்க முழுக்க ரசிகர்கள் கொண்டாட்டத்திற்க்காக மட்டுமே எடுத்து, 4 வருடமாக ஏங்கி இருந்த தல ரசிகர்களை இன்றளவும் நினைத்து கொண்டாட வைத்துள்ளது மங்காத்தா. இன்றோடு அந்த படம் ரிலீஸ் ஆகி 8 வருடங்கள் ஆகிவிட்டது. இதனை இணையதளத்தில் ரசிகர்கள் #8YrsOfIngeniousMANKATHA என்ற ஹேஸ்டேக் மூலம் கொண்டாடி வருகின்றனர்.