naanum rowdy dhaan [file image]
இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான ‘நானும் ரவுடி தான்’ படம் வெளியாகி 8 ஆண்டுகள் ஆகிறது.
நானும் ரவுடி தான்
இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் விஜய்சேதுபதி நடிப்பில் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் ‘நானும் ரவுடி தான்’. இந்த திரைப்படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்திருந்தார். படத்தில் ஆர்.ஜே. பாலாஜி, ராதிகா சரத்குமார்,சூர்யா சேதுபதி, ஆனந்தராஜ், அழகம் பெருமாள், மன்சூர் அலி கான், மொட்டை ராஜேந்திரன், அனிகா சுரேந்திரன் உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து இருந்தார்.
உருவான விதம்
இந்த திரைப்படத்தின் கதையை எழுதி வைத்துவிட்டு விக்னேஷ் சிவன் விஜய் சேதுபதியிடம் கதையை கூற அவரும் நடிக்க சம்மதம் தெரிவித்துவிட்டாராம். பிறகு நயன்தாராவிடம் தான் கதையை கூற இயக்குனர் விக்னேஷ் சிவன் மிகவும் சிரமபட்டாராம். பிறகு எப்படியோ அவரிடமும் இந்த கதையை கூற கதை அவருக்கு மிகவும் பிடித்து போய் தான் நடிக்கிறேன் என்று நயன்தாராவும் ஒப்புக்கொண்டாராம்.
பழைய நயன்தாரா வந்துட்டாங்க! குத்தாட்டம் போட்ட வீடியோவை பார்த்து குஷியான ரசிகர்கள்!
படத்திலும் காதம்பரி எனும் கதாபாத்திரத்தில் அருமையாக நடிகை நயன்தாரா நடித்திருந்தார். இந்த திரைப்படத்தின் மூலம் தான் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா இருவரும் காதலிக்க தொடங்கினார்கள். படத்தின் கதையை சொல்ல சென்றபோதே இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. எனவே, இவர்கள் இருவருக்குமே இந்த திரைப்படம் மிகவும் ஸ்பெஷல் என்றே சொல்லலாம் . இவர்கள் இருவரும் முதன் முதலாக இணைந்த இந்த திரைப்படமும் மிகப்பெரிய ஹிட் ஆனது.
வெற்றி
காதல் கலந்த காமெடி கதைக்களத்தை வைத்து இயக்குனர் விக்னேஷ் சிவன் இந்த திரைப்படத்தை இயக்கி இருந்தார். பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய ஹிட் ஆனது என்றே சொல்லலாம்.
8 ஆண்டுகள்
இந்நிலையில், ‘நானும் ரவுடி தான்’ திரைப்படம் வெளியாகி 8ஆண்டுகள் ஆன நிலையில், ரசிகர்கள் அனைவரும் தங்களுக்கு பிடித்த இந்த படத்தின் காட்சிகளை வெளியீட்டு வருகிறார்கள். படத்தின் கதை எந்த அளவிற்கு படத்தின் வெற்றிக்கு காரணமாக அமைந்ததோ அதைப்போலவே அனிருத்தின் பாடல்களும் பின்னணி இசையும் முக்கிய காரணமாக அமைந்தது என்றே கூறலாம்.
பட்ஜெட் & வசூல்
நானும் ரவுடி தான் திரைப்படம் 15 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. இந்த திரைப்படம் உலகம் முழுவதும் 30 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து மிகப்பெரிய ஹிட் ஆனது. இந்த திரைப்படத்தை ரவுடி பிக்ச்சர்ஸ் நிறுவனம் தான் தயாரித்தது. இதனை வருடங்கள் கடந்தும் இந்த திரைப்படம் இன்னும் பலருடைய பேவரைட் திரைப்படமாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : நடிகர் அஜித் குமார் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' திரைப்படத்தின் டீசர் பிப்ரவரி 28, 2025 அன்று வெளியாகும்…
சென்னை : முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காலை தனது முகநூல் பக்கத்தில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்கிற முறையில், 2026-ஆம் ஆண்டு…
டெல்லி : இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 1984 ஆம் ஆண்டு, அக்டோபர் 31 அன்று தனது சீக்கிய…
ராவல்பிண்டி : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபியின் 7-வது போட்டி இன்று ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவிருந்தது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா…
துபாய் : கடந்த பிப்ரவரி 23-ஆம் தேதி நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணியும், இந்திய கிரிக்கெட் அணியும் மோதியது.…
சேலம் : பாமக கௌரவ தலைவரும், பாமக சட்டமன்ற குழுத் தலைவருமான ஜி.கே.மணியின் இல்ல திருமண விழா நாளை காலை…