800 Trailer: மிரட்டலாக வெளிவந்த முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படத்தின் டிரைலர்!
பிரபல கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாகியுள்ள ‘800 The Movie’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. எம்.எஸ்.ஸ்ரீபதி எழுதி இயக்கும் இப்படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு என 3 மொழிகளில் வெளியாகிறது.
இதில் முத்தையா முரளிதரனாக ஆஸ்கர் வென்ற ஸ்லம்டாக் மில்லியனர் படத்தில் நடித்த நடிகர் மதுர் மிட்டல் நடித்துள்ளார். மேலும், இதில் மஹிமா நம்பியார், நரேன், நாசர், வேல ராமமூர்த்தி, ரித்விகா, அருள் தாஸ், ஹரி கிருஷ்ணன் மற்றும் சரத் லோஹிதஸ்வா ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் டிரெய்லரை கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் வெளியிட்டுள்ளார். டிரெய்லரை வைத்து பார்க்கும்பொழுது, இலங்கையில் இடம்பெயர்ந்த ஒரு இளைஞர் (முத்தையா) வைத்து கதை தொடங்குகிறது. அவர் கிரிக்கெட் வீரராக மாறுவதையும், நாட்டின் அரசியல் சூழலும் பதட்டமும் நிறைந்து காட்சிகள் அமைந்துள்ளது.
பின்னர், முத்தையா பந்து வீச்சாளராகி, இலங்கை அணிக்காக விளையாடுகிறார். கிரிக்கெட் வீரர் மீது குற்றம் சாட்டப்பட்ட பல போட்டிகளுக்கு எதிரான சர்ச்சையையும் டிரெய்லர் காட்டுகிறது.
இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைக்க, ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார், பிரவீன் கே.எல் படத்தொகுப்பு செய்துள்ளார். இந்த திரைப்படம் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா போன்ற சர்வதேச இடங்களைத் தவிர, சென்னை, சண்டிகர் மற்றும் கொச்சி போன்ற உள்நாட்டு இடங்களில் விரிவாக படமாக்கப்பட்டுள்ளது.