இன்று தெலுங்கு சினிமாவுக்கு திருவிழாதான்.! களமிறங்கும் 8 திரைப்படங்கள்..
இந்த 2023ம் ஆண்டு முடிவடைய இன்னும் ஒரு மாதம் மட்டுமே உள்ள நிலையில், தமிழ், மலையாளம், ஹிந்தி சினிமாவில் மட்டுமல்லாமல் தெலுங்கு சினிமாவிலும் பல ருசீகரமான திரைப்படங்கள் திரையரங்குகளில் வரிசையாக வெளியாகி வருகிறது.
அந்த வகையில், இன்று (17.11.2023) தெலுங்கில் சஸ்பென்ஸ் முதல் த்ரில் நிறைந்த திரைப்படங்கள் பல பிரம்மாண்ட திரைப்படங்கள் வெளியாகின்றன. தற்போது இன்று தெலுங்கில் வெளியாகிவுள்ள 8 திரைப்படங்களை இந்த பதிவில் காணலாம்.
மங்களவாரம்
இயக்குனர் அஜய் பூபதி இயக்கத்தில் உருவாகியுள்ள மங்களவாரம் எனும் திரைப்படத்தில் நடிகைகள் பாயல் ராஜ்புத், நந்திதா ஸ்வேதா, திவ்யா பிள்ளை உள்ளிட்டார் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் பி. அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார். ஒரு கிராமத்தில் நடைபெறும் ஆர்வமான கொலைகள் குறித்து பல பதில்கள் நிறைந்த இந்த திரைப்பட இன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
எஸ்எஸ்இ: சைட் பி
ஏ பரம்வா பிக்சர்ஸ் தயாரிப்பில் ஹேமந்த் எம் ராவ் இயக்கியுள்ள சப்த சாகரடாச்சே எல்லோ- சைட் பி (ஸ்எஸ்இ – சைட் பி) திரைப்படத்தில் ரக்ஷித் ஷெட்டி, ருக்மணி வசந்த், சைத்ரா ஜே ஆச்சார், அவினாஷ், ஷரத் லோஹிதாஷ்வா, அச்யுத குமார், பவித்ரா லோகேஷ், ரமேஷ் இந்திரா, கோபால் கிருஷ்ண தேஷ்பாண்டே மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சரண் ராஜ் இசையமைத்துள்ளார்.
ஸ்பார்க்: லைஃப்
டீஃப் ஃபிராக் ப்ரோடக்ஷன்ஸ் தயாரிப்பில், இயக்குனர் விக்ராந்த் ரெட்டி இயக்கத்தில் தயாராகியுள்ள ஸ்பார்க்-லைஃப் திரைப்படத்தில் விக்ராந்த், மெஹ்ரீன் பிர்சாதா, ருக்ஷார் தில்லான், குரு சோமசுந்தரம், நாசர், வெண்ணேலா கிஷோர், சுஹாசினி மணிரத்னம் மற்றும் பல பிரபல நடிகர்கள் நடித்துள்ளார்கள். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார்.
அன்வேஷி
டி கணபதி ரெட்டி தயாரிப்பில், இயக்குனர் வி ஜே கன்னா எழுதி இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில் விஜய் தரன் தட்லா, சிம்ரன் குப்தா, அனன்யா நாகல்லா, அஜய் கோஷ், நாகி, பிரபு, தில் ரமேஷ், சுப்பாராவ், ஹரிகிருஷ்ணா, ராச்சா ரவி, சத்யஸ்ரீ, இம்மானுவேல், ராஜமௌலி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சைதன் பரத்வாஜ் இசையமைத்துள்ளார்.
என் பெயர் ஸ்ருதி
இந்த திரைப்படத்தை புருகு ரம்யா பிரபாகர் தயாரிக்க, இயக்குனர் ஸ்ரீனிவாஸ் ஓம்கார் எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தில் ஹன்சிகா மோத்வானி, பிரேமா, முரளி சர்மா, பூஜா ராமச்சந்திரன், ராஜா ரவீந்திரன், பிரவீன், அதுகுளம் நரேன் ஆகியோர் நடித்துள்ளனர். மாஃபியாவை அடிப்படையாகக் கொண்ட இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சைதன் பரத்வாஜ் இசையமைத்துள்ளார்.
ஜனம்
இந்த திரைப்படத்தை விஆர்பி கிரியேஷன்ஸ் தயாரிக்க இயக்குனர் மற்றும் எழுத்தாளர் வெங்கட ரமண பசுப்புலேட்டி எழுதி இயக்கியுள்ளார். இந்த படத்தில் அஜய் கோஷ், ஜெயவாணி, கே கிஷோர், லக்கி, மௌனிகா, பிரக்யா நயன், வெங்கட ரமண பசுபுலேட்டி, ரஷிதா, சுமன் உள்ளிட்டோர் பல முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் சமூகத்தில் உள்ள யதார்த்தம், சரியான அரசியல் தேர்வுகளை எடுக்க குழந்தைகளை வழிநடத்துவதில் தாய்மார்கள் எதிர்கொள்ளும் சவால்களை சித்தரிக்கிறது.
யே சோட்டா நுவ்வுன்னா
யே சோட்டா நுவ்வுன்னா இன்று வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தை பசலபுடி சத்தி வெங்கடா இயக்கியுள்ளார் மற்றும் பிரசாந்த் குரவனா, அம்பிகா முல்தானி, ஸ்ரீனிவாஸ் ஏழுபாண்டி, முகேஷ் பொலிசெட்டி மற்றும் சதீஷ் சாரிபள்ளி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தருண் ராணா பிரதாப் இசையமைத்துள்ளார்.
அதர்ஸ்- ரீரிலீஸ்
கடந்த 2010ம் ஆண்டு இயக்குனர் வி.வி.விநாயக் இயக்கத்தில் வெளியான அதர்ஸ் திரைப்படம் இன்று மீண்டும் ரீரிலீஸ் செய்யப்படுகிறது. இசை அமைப்பாளர்கள் தேவி ஸ்ரீ பிரசாத், கோடாலி வெங்கடேஸ்வர ராவ் ஆகியோர் இசையமைத்துள்ள இப்படத்தில் ஜூனியர் என்டிஆர், நயன்தாரா, ஷீலா, பிரம்மானந்தம், எம்எஸ் நாராயணா மற்றும் தணிகெல்லா பரன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.