இந்த வருடம் தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளின் திரைப்படங்கள் வரிசை கட்டி ரிலீசாகி வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் பல பிரம்மாண்ட திரைப்படங்கள் வெளியாக காத்திருக்கிறது.
டீசம்பரில் வெளியாக காத்திருக்கும் அனைத்து படங்களும் பிரம்மாண்ட படங்கள் தான். இந்நிலையில், கிறிஸ்துமஸ் பாக்ஸ் ஆபிஸ் கிங் யாரு என்று பொறுத்திருந்து பார்க்கலாம். தென்னிந்திய சினிமாவின் முக்கிய நடிகர்கள் நடித்துள்ள 7 பிரம்மாண்ட திரைப்படங்கள்இந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் அடுத்தடுத்த வெளியாகிறது. இதோ அந்த திரைப்படங்களின் மொத்த லிஸ்ட்.
அனிமல்
அர்ஜுன் ரெட்டி திரைப்பட இயக்குனர் சந்தீப் ரெட்டி இயக்கத்தில் உருவாகி வரும் ‘அனிமல்’ படத்தில், இந்த படத்தில், ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா தவிர அனில் கபூர், பாபி தியோல் மற்றும் ட்ரிப்டி டிம்ரி ஆகியோரும் நடித்துள்ளனர். தமிழ், ஹிந்தி உட்பட 5 மொழிகளில் உருவாகியுள்ள இந்தப்படம், வரும் டிசம்பர் 1ம் தேதி வெளியாகிறது.
மெர்ரி கிறிஸ்மஸ்
இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் இயக்கும் ‘மெர்ரி கிறிஸ்மஸ்’ படத்தில், கத்ரீனா கைஃப் மற்றும் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். தலில், இந்த படம் டிசம்பர் 15, 2023 அன்று திரையரங்குகளில் வெளியிடப்படும் எனத் திட்டமிடப்பட்டது. இருப்பினும், சில காரணங்களால் ஒத்திவைக்கப்பட்ட இப்படம் இப்போது டிசம்பர் 8 ம் தேதி வெளியாக இருக்கிறது.
கேப்டன் மில்லர்
இஇந்த ஆண்டு டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கிறது.யக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவரவிருக்கும் ‘கேப்டன் மில்லர்’ திரைப்படம் டிசம்பர் 15 ரிலீஸ் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில், ஷிவ் ராஜ்குமார், சந்தீப் கிஷன், பிரியங்கா மோகன், நிவேதிதா சதீஷ் மற்றும் ஆர்ஆர்ஆர் புகழ் எட்வர்ட் சோனென்ப்ளிக் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
ஹாய் நான்னா
இயக்குனர் சவுரவ் இயக்கத்தில் உருவாகும் தெலுங்கு நடிகர் நானியின் 30-வது படமான ‘ஹாய் நான்னா’ திரைப்படத்தில் வைர கிரியேஷன்ஸ் தயாரித்துள்ளது. இந்த படத்தில் நடிகர் நானிக்கு ஜோடியாக மிருணாள் தாகூர் நடித்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வரும் டிசம்பர் 21-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நேரு
இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கியுள்ள ‘நேரு’ படத்தில் மோகன்லால் நாயகனாக நடிக்கிறார். ஆசிர்வாத் சினிமாஸ் பேனரில் ஆண்டனி பெரும்பாவூர் தயாரிக்கும் இந்த படத்தில் சித்திக், நந்து, தினேஷ் பிரபாகர், ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மேலும் இப்படத்தின் திரைக்கதையை சாந்தி மாயாதேவி மற்றும் ஜீத்து ஜோசப் ஆகியோர் உருவாக்கியுள்ளனர். இந்த திரைப்படம் மலையாளம் மற்றும் டிசம்பர் 21 ம் தேதி வெளியாகிறது.
டுங்கி
நடிகர் ஷாருக்கான் பதான் மற்றும் ஜவான் திரைப்பட வெற்றியை தொடர்ந்து, இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘டுங்கி’ திரைப்படம் டிசம்பர் 22ம் தேதி வெளியாகிறது. மேலும், இந்த படத்தில் ஷாருக்கான் உடன் டாப்ஸி பன்னு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். பாக்ஸ் ஆபிஸில் பதான் மற்றும் ஜவான் படத்தை தொடர்ந்து டுங்கி திரைப்படமும் ரூ.1000 கோடி வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சலார்
இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் நடித்துள்ள ‘சலார்’ திரைப்படம் டிசம்பர் 22ம் தேதி வெளியாகிறது. இந்த படத்தையும் கேஜிஎஃப் படத்தினை தயாரித்த ஹொம்பாளே ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் நடிகர் பிரபாஸிற்கு ஜோடியாக நடிகை ஸ்ருதி ஹாசன் நடிக்கிறார்.
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…
டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால். இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…
சென்னை : சூர்யாவின் திரைப்பயணத்தில் இயக்குநர் பாலாவுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது என்றே சொல்லலாம். அதற்கு முக்கியமான காரணமே சூர்யா ஆரம்ப…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுகையில், அம்பேத்கர் பெயரை கூறுவது பேஷனாகிவிட்டது. அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் பேசுகையில், அம்பேத்கர் குறித்து பேசுவது…