8 வருடத்திற்கு முன்னால் கணவருடன் சேர்ந்து செய்ததை மீண்டும் செய்யும் ஐஸ்வர்யா ராய் …!

Default Image

கடந்த 2007 ஆம் ஆண்டு  பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனும் ,நடிகை ஐஸ்வர்யாராயும் திருமணம் செய்து கொண்டனர்.இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது .சமீப காலமாக இவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருந்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றது .
இந்நிலையில் சமீபத்தில் ஐஸ்வர்யாராய்க்கும்,அபிஷேக் பச்சனுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டதாக  செய்தி ஓன்று வெளியானது. மும்பை விமான நிலையத்தில் லண்டனுக்கு சென்று திரும்பியபோது சண்டை போட்டதாக வீடியோவும் வெளியானது.
Image result for abhishek aishwarya rai
இந்த பிரச்சினை இருப்பதாக கூறும்நிலையில், நடிகர் அபிஷேக் பச்சனும் , ஐஸ்வர்யாராயும் மீண்டும் படத்தில் இணைத்து நடிக்க உள்ளனர்.அந்த படத்தை  அனுராக் காஷ்யப் இயக்குவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் அந்த படத்தின் பெயர்  ‘குளோப் ஜாமுன்’  ஆகும்.விரைவில் இந்த படபிடிப்பு தொடங்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2008 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் ஹிந்தியில் வெளிவந்த ராவணன் படத்தில் கடைசியாக இருவரும் ஜோடியாக நடித்தனர்.தற்போது மீண்டும் நடிக்க உள்ளனர்.
 
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்