நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியான ‘கொடி’ திரைப்படம் இன்றுடன் வெளியாகி 7 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
இயக்குனர் ஆர்.எஸ்.துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவான ‘கொடி’ படத்தில் தனுஷ் இரட்டை வேடங்களில் நடிக்க, நடிகைகள் த்ரிஷா மற்றும் அனுபமா பரமேஸ்வரன் ஆகிய இருவரும் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்தனர்.
மேலும் இந்த படத்தில், சரண்யா பொன்வண்ணன், எஸ்.ஏ.சந்திரசேகர், காளி வெங்கட், நமோ நாராயண, மற்றும் ஜி.மாரிமுத்து ஆகியோர் நடித்திருந்தனர். படத்தின் இசை மற்றும் பின்னணி இசையை இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் கவனிக்க, வெங்கடேஷ் எஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இத்திரைப்படம் ஒரே நேரத்தில் தெலுங்கில் தர்மயோகி என்ற பெயரில் ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த படத்தில் நடித்த தனுஷ் மற்றும் த்ரிஷாவின் நடிப்புக்குப் பெரும்பாலான பாராட்டுக்கள் குவித்தனர். மேலும், இப்படம் 2018-ல் கன்னடத்தில் ‘த்வஜா’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது.
#7YearsOfKaashmora : கவர்ச்சியில் விருந்து வைத்த நயன்தாரா! கார்த்திக்கு கை கொடுத்ததா ‘காஷ்மோரா’?
இந்த படுத்தில் நடிகர் தனுஷ் முழு அரசியல் வாதியாக நடித்திருப்பார். புதுப்பேட்டை படம் முதல் அரசியல் படமாக இருந்தாலும், முழு அரசியல்வாதியாக கொடி படத்தில் கலக்கி இருப்பார் நடிகர் தனுஷ். மேலும், படத்தில் காதலியாகவும், வில்லியாகவும் மிரட்டியிருப்பார் நடிகை த்ரிஷா.
இந்த திரைப்படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பாஸிட்டிவ் விமர்சனங்களைப் பெற்றது. குறிப்பாக, படத்தில் நடித்த தனுஷ் மற்றும் த்ரிஷாவின் நடிப்புக்குப் பெரும்பாலானோர் பாராட்டுக்கள் குவித்தனர்.
கொடி பாக்ஸ் ஆபிஸ்
இப்படம் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.32.35 கோடி வசூலித்தது. ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானாவில் ரூ.4.60 கோடியும், கர்நாடகா ரூ.2.10 மற்றும் கேரளாவில் ரூ.1.35 என வசூலை குவித்தது. ரூ.6.5 கோடி வசூலித்தது.
மேலும், வெளிநாடுகளில் மட்டும் ரூ.10.85 கோடி வசூல் செய்து அப்போவே சாதனை படைத்து. இந்நிலையில், உலகம் முழுவதும் இந்த திரைப்படம் மொத்தமாக ரூ.51.75 வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…