கார்த்தி நடிப்பில் கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியான ‘காஷ்மோரா’ திரைப்படம் வெளியாகி 7 ஆண்டுகள் ஆகிறது.
‘காஷ்மோரா’
நடிகர் கார்த்தி எப்போதும் வித்தியாசமான கதைகளத்தை கொண்ட படத்தை தான் தேர்வு செய்து நடித்து வருவார். அந்த வகையில், இவருடைய சினிமா கேரியரில் மிகவும் வித்தியாசமான படம் என்றால் கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியான ‘காஷ்மோரா’ திரைப்படம் தான். இந்த திரைப்படத்தை இதற்கு தான ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தை இயக்கிய இயக்குனர் கோகுல் தான் இயக்கி இருந்தார்.
இந்த திரைப்படத்தில் ராஜா சாதாரணமான ஒரு நபர் என இரண்டு கதாபாத்திரங்களில் கார்த்தி நடித்திருந்தார். ராஜா வேடத்தில் நடித்த கார்த்திக்கு ஜோடியாக நடிகை நயன்தாராவும், மற்றோரு கார்த்திக்கு ஸ்ரீதிவ்யா ஜோடியாக நடித்திருந்தார். விவேக், சித்தார்த் விபின், ஜாங்கிரி மதுமிதா, மதுசூதன் ராவ் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள்.
கவர்ச்சி ராணியாக நயன்தாரா
இந்த திரைப்படத்தில் நடிகை நயன்தாரா மிகவும் கவர்ச்சியாக நடித்திருப்பார். குறிப்பாக படத்தில் வரும் ‘ஓயா ஓயா’ எனும் பாடலில் கார்த்தியுடன் இணைந்து மிகவும் கவர்ச்சியான ரோமன்ஸ் காட்சிககளில் நடித்து இருப்பார். அதைப்போல ஒரு ராணி எப்படி இருப்பாரோ அதே போலவே நிஜமாகவே நடித்திருப்பார்.
பத்து கோடி பத்தாது! புது படங்களுக்கு சம்பளத்தை உயர்த்திய நடிகை நயன்தாரா?
தோல்வி
மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த ‘காஷ்மோரா’ திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் தோல்வியை சந்தித்தது. அந்த சமயம் படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் எல்லாம் வெளியாகி பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால், படம் ரசிகர்கள் எதிர்பார்த்தது போல இல்லை என்ற காரணத்தால் படம் தோல்வியை தழுவியது.
7YearsOfKaashmora
இந்த திரைப்படம் கடந்த 2016-ஆம் ஆண்டு இதே நாளில் (அக்28) தான் திரையரங்குகளில் வெளியானது. இந்நிலையில், படம் வெளியாகி இன்றுடன் 7 ஆண்டுகள் ஆன நிலையில், ரசிகர்கள் பலரும் படத்தில் தங்களுக்கு எந்த காட்சிகள் எல்லாம் பார்ப்பதற்கு புதுமையாகவும் பிடித்ததாகவும் இருந்ததோ அதனை வெளியீட்டு படம் குறித்து நினைவு கூர்ந்து வருகிறார்கள்.
பட்ஜெட் வசூல்
அந்த சமயமே 60 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் உலகம் முழுவதும் 60 கோடி வசூல் செய்திருந்தது. தமிழகத்தில் மட்டும் இந்த திரைப்படம் 30 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் நடித்தால் நம்மளுடைய மார்க்கெட் உயரும் படம் வெற்றிபெறும் என காத்திருந்த கார்த்திக்கு இந்த படம் கைகொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…