ஐந்து பாட்டுக்கு 75 கோடி செலவு! கேம் சேஞ்சர் குறித்து உண்மையை உடைத்த தில் ராஜு!
தயாரிப்பாளர் தில் ராஜு கேம் சேஞ்சர் பாடல்கள் எடுக்கப்பட்ட செலவு தொகை பற்றி பேசியபோது ராம்சரண் அதிர்ச்சியான ரியாக்சன் ஒன்றை கொடுத்தார்.
மும்பை : ஷங்கர் இயக்கத்தில் அரசியல் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள கேம் சேஞ்சர் திரைப்படம் வரும் ஜனவரி 10-ஆம் தேதி மிக்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது.
அந்த வகையில், படத்தினை ப்ரோமோஷன் செய்வதற்காக மும்பையில் சமீபத்தில் விழா ஒன்று நடைபெற்றது. அதில், படத்தின் இயக்குநர் ஷங்கர், நடிகர் ராம்சரண், தயாரிப்பாளர் தில் ராஜு உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டார்கள். அதில் பேசிய தில் ராஜு அனைவரையும் வியக்க வைக்கும் அளவுக்கு விஷயம் ஒன்றையும் தெரிவித்தார்.
அது என்னவென்றால், படத்தில் இடம்பெற்ற 5 பாடல்களை எடுப்பதற்காக மட்டுமே 75 கோடி செலவு ஆனது என்பதை தான். இது குறித்து விழாவில் பேசிய அவர் ” கேம் சேஞ்சர் படத்தில் மொத்தமாக ஐந்து பாடல்கள் இருக்கிறது. அந்த ஐந்துப் பாடல்களுக்கான மொத்த பட்ஜெட் செலவு 75 கோடி. அந்த பாடல்களை தனித்தனியாக எடுக்க மொத்தமாக 10 முதல் 12 நாட்கள் ஆனது.
ஷங்கர் சார் ஒவ்வொரு பாடலையும் சரியாக டிசைன் செய்வார். அதைப்போலவே, இந்த படத்திலும் அருமையான பாடல்களை கண்களை கவரும் வகையில் எடுத்துள்ளார். படத்தில் வரும் ஒரு மெலடி பாடலை நியூசிலாந்தில் படம் பிடித்தோம். அதில் ஒரு புதிய முயற்சியையும் அவர் எடுத்திருக்கிறார். படத்தை பார்த்தால் உங்களுக்கு புரியும்” எனவும் கேம் சேஞ்சர் தெரிவித்தார்.