Categories: சினிமா

70வது தேசிய விருதுகள் அறிவிப்பு.! பொன்னியின் செல்வன், திருச்சிற்றம்பலம், கே.ஜி.எஃப்-2…

Published by
மணிகண்டன்

டெல்லி : 2022ஆம் வெளியான திரைப்படங்களுக்கான 70வது தேசிய விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதில் ஏ.ஆர்.ரகுமான், நித்யா மேனன், அன்பறிவு ஆகியோருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியத் திரைப்படங்களில் சிறப்பாக பணியாற்றிய திரைக் கலைஞர்களைக் கௌரவிக்கும் விதமாக மத்திய அரசு சார்பில் சினிமா தேசிய விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, 2022ஆம் ஆண்டு வெளியான திரைப்படங்களில் சிறப்பாக பணியாற்றிய கலைஞர்களுக்குத் தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. 70வது தேசிய விருது நிகழ்வில் தேர்வு செய்யப்பட்ட திரைக் கலைஞர்களின் விவரங்கள் பின்வருமாறு…

  • சிறந்த நடிகர் – ரிஷப் ஷெட்டி (காந்தாரா).
  • சிறந்த நடிகை – நித்யா மேனன் (திருச்சிற்றம்பலம்)
  • சிறந்த தமிழ் திரைப்படம் – பொன்னியின் செல்வன் பாகம் 1.
  • சிறந்த கன்னட திரைப்படம் – கே.ஜி.எஃப் 2.
  • சிறந்த மலையாள திரைப்படம் – சவுதி வெள்ளைக்கா.
  • சிறந்த தெலுங்கு திரைப்படம் – கார்த்திகேயா 2.
  • சிறந்த பொழுதுபோக்கு திரைப்படம் – காந்தாரா (கன்னடம்).
  • சிறந்த திரைப்படம் – ஆட்டம் (மலையாளம்).
  • சிறந்த பின்னணி இசை – ஏ.ஆர்.ரகுமான் (பொன்னியின் செல்வன் பாகம் 1)
  • சிறந்த ஒளிப்பதிவு – ரவிவர்மன் (பொன்னியின் செல்வன் பாகம் 1)
  • சிறந்த நடன அமைப்பு – ஜானி மாஸ்டர் ( திருச்சிற்றம்பலம் படத்தில் இடம்பெற்ற “மேகம் கருக்காதோ ‘ பாடலுக்காக)
  • சிறந்த சண்டைப்பயிற்சி – அன்பறிவ் (கே.ஜி.எப்-2)
  • சிறந்த ஒலி வடிவமைப்பு – ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி (பொன்னியின் செல்வன் பாகம் 1).
  • சிறந்த இயக்குனர் – சூரஜ் ஆர் பர்ஜாத்யா (ஊஞ்சாய்(Uunchai) ஹிந்தி).
  • சிறந்த VFX – பிரம்மாஸ்திரா (ஹிந்தி)

இன்னும் பல பிரிவுகளில் தேசிய விருதுகள் தொடர்ந்து அறிவிக்கப்பட்டு வருகின்றன. தமிழ் சினிமா பொறுத்தவரையில் இதுவரையில் 6 விருதுகளை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Published by
மணிகண்டன்

Recent Posts

நடிகர் அல்லு அர்ஜுன் வீட்டின் மீது தாக்குதல்… ரசிகர்களுக்கு வேண்டுகோள்!

தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை  ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…

1 hour ago

தவறான செய்தி கொண்ட வீடியோக்களுக்கு முற்றுப்புள்ளி… கிரியேட்டர்களுக்கு செக் வைத்த யூடியூப்.!

டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…

2 hours ago

தனியா வந்தாலும் சரி, மொத்தமா வந்தாலும் சரி… “2026ல் திமுக கூட்டணிக்குதான் வெற்றி” – மு.க.ஸ்டாலின்!

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…

3 hours ago

தை அமாவாசை 2025 இல் எப்போது?.

தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…

4 hours ago

பாப்கார்ன்களுக்கு 18% ஜி.எஸ்.டி ஏன்? நிர்மலா சீதாராமன் கொடுத்த விளக்கம்!

ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று  நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…

6 hours ago

நிதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு – டிஜிபி உத்தரவு!

சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…

7 hours ago