சென்னை : கடந்த 2022-ம் ஆண்டில் வெளியான திரைப்படங்களுக்கான தேசிய விருதுகளை தற்போது அறிவித்துள்ளனர். அதன்படி சிறந்த பின்னணி இசைக்காக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்திற்க்காக தேசிய விருது கிடைத்துள்ளது.
இயக்குனர் மணி ரத்னம் டைரெக்க்ஷனில், விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, ஜெயராம், சரத்குமார் போன்றவர்கள் நடித்து பெரும் எதிர்ப்பார்ப்புடன் வெளியான திரைப்படம் தான் ‘பொன்னியின் செல்வன்-1’. இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்திருந்தது. பெரும் எதிர்ப்பார்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் நல்ல ஒரு கலெக்ஷனை பெற்றது.
மேலும், இந்த படம் நல்ல ஒரு வரவேற்பை பெறுவதற்கும், பிரமாண்டமான காட்சிகளை திரையில் கண்ட போது அதற்கு உயிர் மூச்சாய் அமைந்தது இந்த படத்தின் பாடல்களும், குறிப்பாக ரஹ்மானின் பின்னணி இசையும் தான். இந்த படம் வெளியான போதே ரசிகர்கள் அவருக்கு தேசிய விருது கட்டாயமாக கிடைக்கும் என ஆசை வார்த்தைகள் கூறி வந்தார்கள். அந்த அளவிற்கு அவரது இசை இந்த படத்திற்கு தூணாக அமைந்திருக்கும்.
தற்போது, 70-வது தேசிய திரைப்படங்களுக்கான விருதுகளில் இசைப்புயல் ‘ஏ.ஆர்.ரஹ்மானுக்கு’ பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு சிறந்த பின்னணி இசை அமைத்ததற்காக தேசிய விருதென்பது கிடைத்துள்ளது. மேலும், இது அவரது 7-வது தேசிய விருது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் ஏ.ஆர்.ரஹ்மான் ரசிகர்கள் அவருக்கு இணையத்தில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் இன்று ஒரு இளைஞர் வயிற்று வலியால் உயிரிழந்த சம்பவம்…
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…
சென்னை : நடைபெற்ற இலங்கை புதிய நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அதிபர் அனுரகுமார திஸாநாயக்க கூட்டணி…
சென்னை : ஆளும் திமுக அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சராக பொறுப்பில் இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர்…
வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…