வெளியானது ‘7/G ரெயின்போ காலனி 2’ அப்டேட்.! புத்தாண்டில் சர்ப்ரைஸ் கொடுத்த செல்வராகவன்.!
செல்வராகவன் இயக்கும் ‘7/G ரெயின்போ காலனி 2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.
சென்னை: இயக்குநர் செல்வராகவன் தனது மெகா ஹிட் படமான “7ஜி ரெயின்போ காலனி” படத்தின் அடுத்த பாகத்தின் போஸ்டரை புத்தாண்டை முன்னிட்டு வெளியிட்டுள்ளார். படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, ராம்ஜி ஒளிப்பதிவு செய்கிறார்.
முதல் பாகத்தில் நடித்த ரவி கிருஷ்ணாவே இப்படத்திலும் நாயகனாக நடித்து வருகிறார். நாயகியாக மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் நடிப்பதாக தகவல் வெளிவந்திருந்தது குறிப்பிடத்தக்கது. 7ஜி ரெயின்போ காலனி வெளியாகி கிட்டத்தட்ட 21 ஆண்டுகளுக்குப் பிறகு, புத்தாண்டு தினத்தன்று இந்த படத்தின் தொடர்ச்சியை அறிவித்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார் இயக்குனர் செல்வராகவன்.
பர்ஸ்ட் லுக் போஸ்டரில் படத்தின் நாயகன் – நாயகி இரவில் காலியான சாலையில் நடந்து செல்வது போன்ற நிழற்படத்தைக் காட்டுகிறது. மீண்டும் பழைய பாணியில் இயக்குனர் செல்வராகவன் ஸ்கொர் செய்ய போகிறார் என இதன் மூலம் தெரிகிறது.
Here it is
7/G Rainbow colony 2 first look @thisisysr@AMRathnamOfl @ramji_ragebe1 pic.twitter.com/HB3CflZtsb— selvaraghavan (@selvaraghavan) January 1, 2025
ஆனால், கதைக்களம், வெளியீட்டு தேதி மற்றும் துணை நடிகர்கள் பற்றிய விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருக்கும் இப்படத்தின் அடுத்தகட்ட அப்டேட் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2004-ஆம் ஆண்டு வெளியான ‘7ஜி ரேம்போ காலனி’ படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அந்த அளவிற்கு காதல் காட்சிகளை கண்கலங்க வைக்கும் வகையில், பார்த்து பார்த்து இயக்குநர் செல்வராகவன் இயக்கி இருந்தார். இதனால், இளைஞர்கள் மனதில் இந்த திரைப்படம் பெரிதும் இடம்பிடித்தது என்றே சொல்லலாம்.