ஆறாவது வாரத்திலும் விண்ணைமுட்டும் வெற்றி! 100க்கும் அதிகமான திரையரங்குகளில் தலயின் ‘விஸ்வாசம்’!!
தல அஜித் மற்றும் சிறுத்தை சிவா கூட்டணியில் நான்காவதாக வெளியன திரைப்படம் ‘விஸ்வாசம்’ சத்ய ஜோதி பிலிம்ஸ் இப்படத்தை தயாரித்திருந்தது. டி.இமான் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். நயன்தாரா, விவேக் , தம்பி ராமையா, ரோபோ சங்கர் ஆகியோர் ஆகியோர் உடன் நடித்திருந்தனர்.
இப்படம் தந்தைக்கும் மகளுக்குமான பாசத்தை குடும்பத்துடன் பார்க்கும்படி ஆக்ஷ்ன் கலந்து எடுக்கப்பட்டிருந்தது. ஆதலால் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இப்படம் வெளியாகி 6 வாரங்களை நெருங்கியும் இடையில் பல திரைப்படங்கள் வெளியானாலும் தமிழ்நாட்டில் இன்னும் நூற்றுக்கும் அதிகமான திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது . இதனை திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவித்து வருகின்றனர். பல மல்டிப்ளக்ஸ் திரையரங்குகளில் காட்சிநேரம் மாற்றியமைக்கப்பட்டு ரசிகர்கள் ஆதரவோடு திரையிடப்பட்டு வருகிறது.
DINASUVADU