69வது தேசிய திரைப்பட விருது : சிறந்த திரைப்படத்திற்கான விருதை வென்றது ராக்கெட்ரி!
ஆண்டுதோறும் சிறந்த படங்கள், நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களுக்கு இந்திய அரசு சார்பில் தேசிய திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், 2021-ஆம் ஆண்டிற்கான விருது இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த திரைப்படத்திற்கான விருதை ராக்கெட்ரி திரைப்படம் வென்றுள்ளது.
விண்வெளி ஆய்வு மையம் முன்னாள் விஞ்ஞானி மற்றும் விண்வெளிப் பொறியியலாளர் நம்பி நாராயணனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ராக்கெட்ரி திரைப்படத்தை நடிகர் மாதவன் தயாரித்து நடித்து இயக்கவும் செய்து இருந்தார். இந்த படம் விமர்சன ரீதியாக நல்ல வெற்றியை பெற்றது.
இந்த படத்திற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ரசிகர்கள் சினிமா பிரபலங்கள் என பலரும் மாதவனுக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். மேலும், ஆஸ்கார் விருது வென்ற ‘RRR’ படத்துக்கு 6 தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதைப்போல புஷ்பா படத்திற்கு இசையமைத்ததற்காக சிறந்த இசையமைப்பாளருக்கான விருது தேவி ஸ்ரீ பிரசாதுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.