69NationalFilmAwards2023: RRR படத்துக்கு 6 தேசிய விருதுகள்!

rrr

சினிமா துறையினை இந்திய அரசினால் கௌரவவிக்கப்படும் உயர்ந்த விருதான தேசிய விருது ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வருகிறது.  அந்த வகையில், கடந்த 2021-ஆம் ஆண்டுக்கான 69-வது தேசிய திரைப்பட விருதுகளை மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் இன்று டெல்லியில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அறிவித்துள்ளார்.

இந்நிலையில், ஆஸ்கார் விருது வென்ற ‘RRR’ படத்துக்கு 6 தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிறந்த ஸ்டண்ட் பிரிவு, சிறந்த நடனம், சிறந்த  எபக்ட் பிரிவிலும், சிறந்த பொழுது போக்கு பிரிவிலும், சிறந்த பின்னணிப் பாடகர், சிறந்த பின்னணி இசை என  தேர்வு செய்யப்பட்டுள்ளது.

சிறந்த நடன அமைப்பாளர் (Best Choreography) – ரேம் ரக்ஷித்

 சிறந்த பின்னணி இசை (Best Background Score) – எம்.எம்.கீரவாணி

சிறந்த ஆக்‌ஷன் ஸ்டண்ட் கோரியோகிராஃபி (Best Action Stunt Choreography) –

சிறந்த சிறப்பு எபக்ட் (Best Special Effects) – ஸ்ரீனிவாஸ் மோகன்

சிறந்த பின்னணிப் பாடகர் (Best Play Back Singer) – கால பைரவா

சிறந்த பொழுதுபோக்கு (Best Entertainment) – RRR படம்

சினிமா உலகின் மிக உயரிய விருதான ஆஸ்கர் விருது விருது வழங்கும் விழா அமெரிக்கா, லாஸ் ஏஞ்சல்ஸில் தொடங்கி நடைபெறுகிறது. 95வது ஆஸ்கார் விருது விழா அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸில் டால்பி அரங்கில் நடைபெறுகிறது. ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு, சிறந்த பாடலுக்கான ஆஸ்கார் விருது வழங்கப்பட்டுள்ளது

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்