திரைத்துறையில் சிறந்து விளங்கும் நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்டோருக்கு வருடம் தோறும் மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் தேசிய விருது வழங்கி கௌரவித்து வருகிறது. அந்த வகையில், இன்று ( ஜூலை 22 ) மாலை 4 மணிக்கு 68-வது தேசிய திரைப்பட விருதுகள் விழா டெல்லியில் அறிவிக்கப்பட உள்ளது.
2020ம் ஆண்டு வெளியான திரைப்படங்களில், சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர், நடிகை, இயக்குநர் உள்ளிட்ட பிரிவுகளில் விருதுகள் அறிவிக்கப்படவுள்ளது. 2020-இல் கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டிருததால் சூரரைப் போற்று, பொன்மகள் வந்தால், பென்குயின், மூக்குத்தி அம்மன் உள்ளிட்ட படங்கள் நேரடியாக சில ஓடிடி தளங்களில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்றது.
இந்த படங்கள் தணிக்கை சான்றிதழை முறையாக பெற்றதால், தேசிய விருதிற்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில், சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப் போற்று, ஜெய்பீம் மற்றும் கபெ ரணசிங்கம் ஆகிய படங்கள் போட்டியில் கலந்து கொண்டுள்ளது.
இன்று அறிவிக்கப்படவுள்ள 68-வது தேசிய விருதில் நடிகர் சூர்யா விருது வாங்குவார் என ரசிகர்களுக்கு மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கடந்த் ஆண்டு தனுஷ், விஜய் சேதுபதி, பார்த்திபன், இயக்குநர் வெற்றிமாறன், தயாரிப்பாளர் கலைப்புலி தானு உள்ளிட்டோருக்கு தேசிய விருதுகள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…