இந்நிலையில், 65-வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று டெல்லியில் அறிவிக்கப்பட்டன. இதில், ‘டேக் ஆஃப்’ படத்தில் நடித்ததற்காக பார்வதிக்கு சிறப்புப் பிரிவில் தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
48-வது தேசிய திரைப்பட விழாவில், இந்தப் படத்தின் இயக்குநர் மகேஷ் நாராயணுக்கு சிறப்பு நடுவர் விருது வழங்கப்பட்டது. மேலும், அந்தப் படத்தில் நடித்த பார்வதிக்கு, சிறந்த நடிகைக்கான வெள்ளி மயில் விருது வழங்கப்பட்டது.
சிறந்த அறிமுக இயக்குநர், சிறந்த நடிகை, சிறந்த பின்னணி இசை, சிறந்த கலை இயக்குநர், சிறந்த ஒப்பனைக் கலைஞர் என 5 கேரள மாநில அரசு விருதுகளையும் வென்றுள்ளது இந்தப் படம்.
இதேபோல் சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான தேசிய விருது டூலெட் படத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது . இன்னும் திரைக்கு வராத டூலெட் படத்தை செழியன் இயக்கியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.