தமிழ் சினிமாவில் பிகினியை நீண்ட காலத்திற்கு பிறகு அறிமுகப்படுத்தி ஹாட்டு காட்டியவர் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா. நடிகர் அஜித் நடித்த பில்லா திரைப்படத்தில் இவர் பிகினியில் தோன்றினார். இதன் பிறகு மீண்டும் நடிகைகளை பிகினியில் தோன்றவைக்கும் கலாச்சாரம் தமிழ் சினிமாவில் தலைக் தூக்கியது.
இதற்கு முன் யாரும் பிகினியில் தோன்றியது இல்லையா என்று சிலர் கேள்வி கேட்கலாம். 90களில் ரம்யா கிருஷ்ணன், ரம்பா என பல மொழி படங்களில் பலர் பிகினியில் தோன்றியுள்ளனர்.ஆனால், இவர்களுக்கு எல்லாம் முன்னரே 60,70,80களில் பல இந்திய நடிகைகளில் பிகினியில் தோன்றி ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
டிம்பிள் கபாடியா
ராஜ் கபூரால் 16 வயதில் சினிமாவில் அறிமுகமானவர் டிம்பிள் கபாடியா. இவர் நடித்த பாபி (1973) எனும் ரொமான்ஸ் சினிமா இன்றளவும் இந்திய சினிமாவின் முக்கியமான படங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.இவர் ராஜேஷ் கன்னாவை திருமணம் செய்துக் கொண்டதற்கு பிறகு நடிப்பில் இருந்து விலகிவிட்டார்.
ஹெலன்
ஹெலன் ரிச்சர்ட்சன் கான் எனும் இவரை ஹெலன் என்றே சுருக்கமாகவும், பிரபலமாகவும் அழைக்கிறார்கள். இவர் பர்மாவில் பிறந்தவர். 700க்கும் மேற்பட்ட இந்திய படங்களில் நடிகையாகவும், டான்சராகவும் தோன்றியிருக்கிறார். இவர் இரண்டு முறை பிலிம்பேர் விருதுகளும் வென்றுள்ளார். இவர் சலீம் கான் எனும் தயாரிப்பாளரை திருமணம் செய்துக் கொண்டார்.
மாதவி
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஒரியா போன்ற மொழிப் படங்களில் நடித்தவர் நடிகை மாதவி. இவர் 1980-90களில் முதலிட நாயகியாக வலம்வந்தவர் ஆவார். பிறகு 1996களில் இருந்து துணை நடிகையாக நடிக்க துவங்கினார். ஐதராபாத் பூர்வீகமாக கொண்ட மாதவி பரதநாட்டியத்தை முறைப்படி பயின்றவர் ஆவார்.
மந்தாகினி
நடிகை மந்தாகினி இந்தி திரைப்பட நடிகை. இவர் ராம் தேரி கங்கா என்ற படம் முதல் பல ரசிகர்களை ஈர்த்தவர். இவர் ஒரு ஆங்கிலோ இந்தியர் ஆவார். இவர் அப்பா பிரிட்டிஷ்காரர், அம்மா இந்தியாவை சேர்ந்த இஸ்லாமியர்.
நீனா குப்தா
நீனா குப்தா டெல்லியில் பிறந்து, வளர்ந்தவர். சமஸ்கிருதம் முதுகலை படித்த இவர் எம்.பில்-ம் முடித்தவர் ஆவார். இவர் இந்திய படங்கள் மட்டுமின்றி காந்தி, மெர்ச்சன்ட் ஐவரி, இன் கஸ்டடி போன்ற சர்வதேச படங்களிலும் நடித்திருக்கிறார். சினிமாவை தொடர்ந்து இவர் சின்னத்திரையிலும் தோன்றினார்.
சைரா பானு
இந்தி சினிமா உலகின் மாபெரும் நடிகை சைரா பானு. இவர் நடிகர் திலீப் குமாரை திருமணம் செய்துக் கொண்டார். 1961-1988 வரை இவர் பல இந்தி திரைப்படங்களில் நடித்திருக்கிறார். 1960ல் இந்தி சினிமாவில் தனது 16வது வயதில் நடிக்க துவங்கினார் சைரா பானு.
சரிகா
நான்கு வயதில் நடிக்க துவங்கியவர் நடிகை சரிகா. இவர் நடிகர் கமலின் இரண்டாவது மனைவியும், நடிகை ஸ்ருதி ஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசனின் அம்மாவும் ஆவார். ஸ்ருதி ஹாசன் பிறந்த பிறகு, தன் துறையில் உச்சத்தில் இருந்த போது விலகி சென்னைக்கு வந்தார் சரிகா.
ஷர்மிளா தாகூர்
பேகம் ஆயிஷா சுல்தானா என்ற இயற்பெயர் கொண்ட ஷர்மிளா தாகூர் இந்தி மற்றும் பெங்காலி சினிமாவில் நடித்து வந்தவர். இவர் இரண்டுமுறை தேசிய விருதும் ஒருமுறை பிலிம்பேர் விருதும் வென்றிருக்கிறார். இந்திய அரசு இவருக்கு பத்மா பூஷன் விருதும் அளித்து கௌரவப் படுத்தியுள்ளது.
ஸ்ரீதேவி
கந்தன் கருணை படத்தின் மூலம் 4 வயதில் நடிப்புத் துறையில் அறிமுகமானவர் நடிகரி ஸ்ரீதேவி. இவர் தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் டாப் நடிகையாக திகழ்ந்தவர். 1980-90கள் வரை இந்திய திரை உலகில் அதிக ஊதியம் பெற்று வந்தார். இந்தியாவின் முதல் லேடி சூப்பர்ஸ்டார் என்ற புகழுக்கு சொந்தக் காரர்.
தனுஜா
நடிகை தனுஜா இந்தி படங்களில் நடித்தவர். இவர் இயக்குனர் குமர்சென் சமர்த் – நடிகை ஷோபனா சமர்த்க்கு மகளாக பிறந்தவர். தனுஜாவினி ஆரம்பக் காலக்கட்ட படங்களை இவரது தாய் ஷோபனா தான் தயாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : நடிகர் ஜெயம் ரவிக்கும் - ஆர்த்தி என்பவருக்கும் கடந்த 2009இல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள்…
சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில், வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்ததால் பதற்றம் எழுந்துள்ளது. தீவிர சிகிச்சை…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் தொழில்முறையிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெறும் போட்டியில் அமெரிக்காவின் முன்னாள் ஹெவி…
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் இன்று ஒரு இளைஞர் வயிற்று வலியால் உயிரிழந்த சம்பவம்…
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…