2025 ஆஸ்கர் விருது: போட்டியில் ‘வாழை’ உள்ளிட்ட 6 தமிழ் திரைப்படங்கள்!
சிறந்த வெளிநாட்டுத் திரைப்படத்துக்கான பரிந்துரையில் இந்தியா சார்பாக 'Laapataa Ladies' பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது.
டெல்லி : சினிமா உலகில் மிக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருது ஆண்டுதோறும் அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வழங்கப்பட்டு வருகிறது.
2025ம் ஆண்டிற்கான 97வது ஆஸ்கர் விருதுக்கு இந்திய சினிமாவில் இருந்து 10 இந்தி, 6 தமிழ், 5 மலையாளம், 3 தெலுங்கு படங்கள் உள்பட 28 திரைப்படங்கள் செல்கின்றன.
இதில், இந்தியா சார்பாக அமீர்கான் தயாரிப்பில் கிரண் ராவ் இயக்கிய ‘லாப்பட்டா லேடிஸ்’ (இந்தி) திரைப்படம் சிறந்த வெளிநாட்டுப் படத்திற்கான ஆஸ்கர் விருது பிரிவிற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய திரைப்பட கூட்டமைப்பு நிர்வாகிகள், இந்தியா முழுவதும் இருந்து பல்வேறு மொழிகளைச் சேர்ந்த 28 படங்கள் ஆஸ்கருக்கு பரிந்துரை செய்திருப்பதாக தெரிவித்தனர்.
6 தமிழ் படங்கள்
- மகாராஜா
- கொட்டுக்காளி
- ஜிகர்தண்டா Double x
- வாழை
- தங்கலான்
- ஜமா
96-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா இந்த ஆண்டு மார்ச் மாதம் அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில், சிறந்த இயக்குனர், சிறந்த படம், சிறந்த நடிகர் உள்ளிட்ட 7 விருதுகளை ‘ஓப்பன்ஹைமர்’ திரைப்படம் குவித்தது.