கேரளாவில் நடிகை பாவனா கடத்தப்பட்டு பாலியல் துன்பத்திற்கு உள்ளாக்க முயற்சித்த சம்பவத்தைத் தொடர்ந்து மலையாள சினிமா நடிகைகள் மற்றும் திரையுலகின் பல்வேறு அமைப்புகளில் உள்ள பெண்களையும் இணைத்து WCC என்கிற பெண்கள் நலப் பாதுகாப்பு அமைப்பை தொடங்கி உள்ளனர்.
இதனால் தங்களது பாதுகாப்பை உறுதிச் செய்யவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கவும் அவர்கள் முடிவு எடுத்துள்ளனர்.
இந்த அமைப்பில் மஞ்சு வாரியார், பார்வதி, ரீமா கல்லிங்கல், ரம்யா நம்பீசன் உள்ளிட்ட முன்னணி மலையாள நடிகைகள் உறுப்பினர்களாக உள்ளனர்.
இந்த அமைப்பின் சார்பில் தற்போது,மலையாள நடிகர் சங்க நிர்வாகக் குழுவில் பெண்களுக்கு 5௦ சதவீத இட ஒதுக்கீடு தர வேண்டும் என்ற கோரிக்கையை உயர்த்திப் பிடித்துள்ளார் நடிகை ரம்யா நம்பீசன்.
இதுபற்றி மலையாள நடிகர் சங்கமான ‘அம்மா’வுக்கும் கடிதம் எழுதியுள்ளார் ரம்யா நம்பீசன்.
அதில், ‘ஆண்களின் ஆதிக்கம் அதிகமாக உள்ள நடிகர் சங்க நிர்வாக குழுவில், இனி பாதிக்குப் பாதி பெண்கள் இருந்தால்தான் எங்களுக்கான பாதுகாப்பை நாங்கள் உறுதிப்படுத்த முடியும்” என்று கூறியுள்ளார்.
டெல்லி: நடிகை தீபிகா படுகோன் சினிமாவில் நடிப்பது மட்டும் இல்லாமல், பல்வேறு சமூக நிகழ்வுகள், சர்ச்சை பேச்சுகள், சில நேரங்களில்…
சென்னை : சட்டப்பேரவையின் 5-வது நாள் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், அதில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான சட்டதிருத்த…
சென்னை : இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கடைசியாக வெளியான இந்தியன் 2 படம் படுதோல்வியை சந்தித்திருந்த நிலையில், அடுத்ததாக கம்பேக் கொடுக்கும்…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து மூன்றாவது நாளாக உயர்ந்து காணப்படுகிறது. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.200 உயர்ந்திருக்கிறது.…
சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையின் இன்றயை நிகழ்வுகளில் பங்கேற்க வந்த திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், 'இவன்தான் அந்த சார்' என அண்ணா…
சென்னை: விஜயின் தமிழக வெற்றிக்கழக மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் சென்னை பனையூர் அலுவலகத்தில் இன்று நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில்…