51 வயது பெண்ணாக வாக்காளர் பட்டியலில் இடம்பெற்ற சன்னி லியோன்…!அதிரவைத்த அரசு
பிரபல இந்தி நடிகை சன்னி லியோனின் புகைப்படம் உத்தர பிரதேச மாநில வாக்காளர் பட்டியலில் ஒரு பெண்ணின் புகைப்படத்துக்கு பதில் இடம்பெற்றுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் உத்தரபிரதேச மாநிலத்தில் தயாரிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது 2 பக்கங்கள் வெளியாகியுள்ளன. அதில் 51 வயது பெண்ணின் புகைப்படத்துக்கு பதில் சன்னி லியோனின் படமும், 56 வயது ஆணின் படத்துக்கு பதில் யானை படமும் இடம்பெற்றுள்ளன. இதேபோல் மான், புறா ஆகியவற்றின் புகைப்படங்களும் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.இது குறித்து தேர்தல் ஆணைய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
DINASUVADU