4 ஆண்டுகளுக்கு பிறகு ஷாருக்கான் படம்…! ‘பதான்’ FDFS பார்க்க 50,000 ரசிகர்கள் ரெடி.!

Default Image

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் கடைசியாக கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான “ஸிரோ” எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து கடந்த 4 ஆண்டுகளாக ஷாருக்கான் ஹீரோவாக நடித்த எந்த திரைப்படமும் திரையரங்குகளில்  வெளியாகவில்லை.

ShahRukhKhan
ShahRukhKhan [Image Source: Google ]

இதனையடுத்து கிட்டத்தட்ட 4 ஆண்டுகளுக்கு பிறகு ஷாருக்கான் ஹீரோவாக நடித்துள்ள “பதான்” திரைப்படம் வரும் ஜனவரி 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்திற்கான டிரைலர் கூட கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது என்றே கூறலாம்.

pathan
Pathan[Image Source: Google]

கிட்டத்தட்ட 4 ஆண்டுகளுக்கு பிறகு ஷாருக்கான் படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பதால் பாலிவுட் திரையுலகம் மட்டுமின்றி, கோலிவுட் திரையுலகுமும் பதான் படத்தை பார்க்க ஆவலுடன் காத்துள்ளனர். படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது.

shahrukh khan universe
shahrukh khan universe [Image Source: Google ]

இந்நிலையில், ஷாருக்கானின் மிகப்பெரிய ரசிகர் மன்றமான ‘ஷாருக்கான் யுனிவர்ஸ்’ (srkuniverse) என்ற ரசிகர் மன்ற அமைப்பு பதான் படத்தை கொண்டாடும் வகையில், சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது. நிறுவனத்தின் இணை நிறுவனர் யாஷ் பர்யானி  இதுவரை, மொத்தமாக 200 நகரங்களில் ஒரே நேரத்தில் “பதான்” படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்க்க 50,000 பேர் வருவார்கள் என கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்