இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கும் படங்கள் என்றாலே அந்த படங்கள் அனைத்தும் சமீபகாலமாக வெற்றிபெற்று விடுகிறது. இவருடைய இசையில் கடைசியாக வெளியான ஷாருக்கான் நடித்த ஜவான் படம் மிகப்பெரிய வரவேற்ப்பை பெற்றது. இவருடைய இசையில் அடுத்ததாக லியோ திரைப்படம் வரும் அக்டோபர் 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இதற்கிடையில், பேட்டி ஒன்றில் தான் 500 கோடி வசூல் செய்யும் படங்களுக்கு இசையமைப்பது போல தான் 1 கோடி படத்திற்கும் இசையமைப்பேன் என்று கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” எனக்கு பல ஹிட் பாடல்கள் சிறிய பட்ஜெட் படங்களில் இருந்து தான் வந்துள்ளது.
இது 500 கோடி திரைப்படம் அல்லது 1 கோடி படமாக இருந்தாலும் சரி நான் இசையமைத்த முதல் நாளில் இருந்து அனைத்து திரைப்படங்களிலும் ஒரே மாதிரியான முயற்சிகளை மேற்கொள்வதே எனது நோக்கமாக இருக்கிறது. நான் பெரிய படங்களுக்கு இசையமைக்கும் போது மட்டும் மிகவும் முயற்சி செய்வேன் என்று இல்லை.
எல்லா படத்திற்கும் நான் ஒரே மாதிரி தான் இசையமைத்து வருகிறேன். குறிப்பாக நான் சிறிய பட்ஜெட் படங்களுக்கு இசையமைக்கும் போது ஒரு அழுத்தம் இல்லாமல் வேலை செய்வேன். புதிதாக எதாவது முயற்சி செய்வேன் ” எனவும் அனிருத் தெரிவித்துள்ளார். இவர் பேசியதை பார்த்த ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் நீங்கள் முன்னணி இசையமைப்பாளராக வளர இது தான் காரணம் என அவரை புகழ்ந்து தள்ளி வருகிறார்கள்.
மேலும், இசையமைப்பாளர் அனிருத் லியோ திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக இந்தியன் 2, விடாமுயற்சி, தலைவர் 170, தலைவர் 171, ஆகிய தமிழ் படங்களுக்கும் தெலுங்கில் தேவரா எனும் திரைப்படத்திற்கும் இசையமைத்து வருகிறார். தொடர்ச்சியாக இவர் பெரிய படங்களுக்கு இசையமைக்க கமிட் ஆகியுள்ள காரணத்தால் இந்த படங்களின் பாடல்கள் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…