ரன்பீர் கபூர் முக்கிய வேடத்தில் நடித்துள்ள “அனிமல்” திரைப்படம் டிசம்பர் 1 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி உலக பாக்ஸ் ஆபிஸில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில்வெளியான முதல் நாளில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. வசூல் ரீதியாகவும் சக்கை போடு போட்டு வருகிறது.
அதன்படி, ஷாருக்கானின் ஜவான் படத்திற்குப் பிறகு பாலிவுட் சினிமா வரலாற்றில் இரண்டாவது மிகப்பெரிய முதல் நாள் வசூல் சாதனையை ‘அனிமல்’ திரைப்படம் வார இறுதியில் இந்தியாவில் ரூ.201 கோடி வசூலித்தது.
படத்தின் கதைக்களம் என்பது தந்தை பாசம் கிடைக்காமல் ஏங்கித் தவிக்கும் மகனுக்கும். அவன் பாசம் வைக்கும் தந்தைக்கும் இடையிலான கதை தான். தற்பொழுது, இப்படம் உலகளவில் எவ்வளவு வசூலித்திருக்கிறது எனபது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
வசூல் வேட்டையில் ‘அனிமல்’ படம்…5 நாளில் எத்தனை கோடி தெரியுமா.?
உலகம் முழுவதும் அனிமல் திரைப்படம் முதல் நாளில் ரூ.116 கோடிக்கு மேல் வசூல் செய்து இருந்தது. இரண்டாம் நாளில் ரூ.120 கோடி எனவும், மூன்றாம் நாளில் ரூ.120 கோடி எனவும், நான்காம் நாளில் ரூ.69 கோடி என ஐந்தாம் நாளில் ரூ.56 என்று மொத்தம் 481 கோடிமற்றும் ஆறாம் நாளான நேற்று ரூ.46.60 கோடி வசூல் செய்து மொத்தம் 527 கோடி ரூபாய் வாசு செய்து மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளது.
இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கிய அனிமல் திரைப்படத்தில் நடிகர் ரன்பீர் கபூர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ‘அனிமல்’ படத்தை டி-சீரிஸ் பிலிம்ஸ், பத்ரகாளி பிக்சர்ஸ் மற்றும் சினி 1 ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது. இந்த படத்தில், ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா தவிர அனில் கபூர், பாபி தியோல் மற்றும் ட்ரிப்டி டிம்ரி ஆகியோரும் நடித்துள்ளனர்.
சென்னை : தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 6-முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவியர்களின் உயர் கல்விக்கான செலவை…
சென்னை : மத்திய அரசின் தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் யுஜிசி – நெட் தேர்வு 30 பாடங்களுக்கு ஜனவரி 15,…
டெல்லி : கடந்த ஆகஸ்ட் மாதம் வங்கதேசத்தில் ஏற்பட்ட உள்நாட்டு கலவரத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்த உள்நாட்டு கிளர்ச்சி உச்சத்தில்…
சென்னை : மெட்ரோ நிர்வாகம் தற்போது, இரண்டாம் கட்ட திட்டத்தில் ஓட்டுநர் இல்லாமல் இயக்கப்படும் மெட்ரோஇரயில்களை தயாரிப்பதற்கான ஒப்பந்தத்தை ரூ.3,657.53 கோடி…
கிறிஸ்மஸ் தாத்தா உருவான வரலாறு, கிறிஸ்மஸ் ட்ரீ வைக்க காரணம் மற்றும் வீட்டில் ஸ்டார் வைப்பது எதற்காக என்றும் இந்த…
ஆந்திரா : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) பிஎஸ்எல்வி சி-60 (PSLV-C60/SPADEX ) ராக்கெட் எப்போது எந்த தேதியில்…