500 கோடியை தாண்டிய அனிமல் திரைப்படம்! பாலிவுட்டில் தடம் பதித்த ரன்பீர் கபூர்…

Animal box office

ரன்பீர் கபூர் முக்கிய வேடத்தில் நடித்துள்ள “அனிமல்” திரைப்படம் டிசம்பர் 1 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி உலக பாக்ஸ் ஆபிஸில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி  வருகிறது. மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில்வெளியான முதல் நாளில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. வசூல் ரீதியாகவும் சக்கை போடு போட்டு வருகிறது.

அதன்படி, ஷாருக்கானின் ஜவான் படத்திற்குப் பிறகு பாலிவுட் சினிமா வரலாற்றில் இரண்டாவது மிகப்பெரிய முதல் நாள் வசூல் சாதனையை ‘அனிமல்’ திரைப்படம் வார இறுதியில் இந்தியாவில் ரூ.201 கோடி வசூலித்தது.

படத்தின் கதைக்களம் என்பது தந்தை பாசம் கிடைக்காமல் ஏங்கித் தவிக்கும் மகனுக்கும். அவன் பாசம் வைக்கும் தந்தைக்கும் இடையிலான கதை தான். தற்பொழுது, இப்படம் உலகளவில் எவ்வளவு வசூலித்திருக்கிறது எனபது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

வசூல் வேட்டையில் ‘அனிமல்’ படம்…5 நாளில் எத்தனை கோடி தெரியுமா.?

பாக்ஸ் ஆபிஸ்

உலகம் முழுவதும் அனிமல் திரைப்படம் முதல் நாளில் ரூ.116 கோடிக்கு மேல் வசூல் செய்து இருந்தது. இரண்டாம் நாளில் ரூ.120 கோடி எனவும், மூன்றாம் நாளில் ரூ.120 கோடி எனவும், நான்காம் நாளில் ரூ.69 கோடி என ஐந்தாம் நாளில் ரூ.56 என்று மொத்தம் 481 கோடிமற்றும் ஆறாம் நாளான நேற்று ரூ.46.60 கோடி வசூல் செய்து மொத்தம் 527  கோடி ரூபாய் வாசு செய்து மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளது.

அனிமல்

இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கிய அனிமல் திரைப்படத்தில் நடிகர் ரன்பீர் கபூர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ‘அனிமல்’ படத்தை டி-சீரிஸ் பிலிம்ஸ், பத்ரகாளி பிக்சர்ஸ் மற்றும் சினி 1 ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது.  இந்த படத்தில், ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா தவிர அனில் கபூர், பாபி தியோல் மற்றும் ட்ரிப்டி டிம்ரி ஆகியோரும் நடித்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்