அடி தூள்…1 நாளில் ’50’ கோடி..! வசூலில் மாஸ் காட்டும் ‘துணிவு’.!
அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படம் கடந்த ஜனவரி 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான நிலையில், படத்தை பார்த்த பலரும் படம் அருமையாக இருப்பதாகவும் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். விமர்சனம் படத்திற்கு நன்றாக வந்துகொண்டிருப்பதால், படத்தின் வசூலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
அந்த வகையில், படம் வெளியான முதல் நாளில் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, படம் வெளியான முதல் நாளில் தமிழகத்தில் மட்டும் 25 கோடி வரை வசூல் செய்துள்ளதாம். கர்நாடகாவில் 4 கோடியும், ஆந்திரா பிரதேச பகுதியில் 2 கோடியும், மத்திய கிழக்கு மாநிலத்தில் 2 கோடி என தருமாறாக வசூலை குவித்துள்ளது.
மொத்தமாக உலகம் முழுவதும் “துணிவு” திரைப்படம் வெளியான முதல் நாளே 50 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே அஜித்தின் சினிமா கேரியரில் இந்த திரைப்படம் நல்ல ஓப்பனிங் கொடுத்த திரைப்படம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
படத்திற்கு நல்ல பாசிட்டிவான விமர்சனம் கிடைத்து வருவதால் வரும் நாட்களில் படத்தின் வசூல் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த துணிவு திரைப்படத்தை இயக்குனர் எச்,வினோத் இயக்கியுள்ளார். படத்தை போனிகபூர் தயாரித்துள்ளார். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.