கர்நாடக அரசியலை கலக்கும் நடிகைகள் ரம்யா, பூஜா காந்தி!

Published by
Dinasuvadu desk

தமிழில் குத்து, கிரி, பொல்லாதவன், வாரணம் ஆயிரம், சிங்கம்புலி ஆகிய படங்களில் நடித்துள்ள கன்னட நடிகை ரம்யா கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சியில் இணைந்து தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். 2013-ல் மாண்டியா நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பிறகு அதே தொகுதியில் நடந்த நாடாளுமன்ற பொது தேர்தலில் தோல்வி அடைந்தார். தற்போது காங்கிரஸ் தொழில் நுட்ப பிரிவில் முக்கிய பொறுப்பில் இருக்கிறார்.Related image

பிரபு சாலமன் இயக்கிய கொக்கி படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழில் அறிமுகமான பூஜா காந்தி, சரத்குமாருடன் வைத்தீஸ்வரன், அர்ஜுன் ஜோடியாக திருவண்ணாமலை படங்களில் நடித்துள்ளார். கன்னடத்தில் முன்னணி நடிகையாக இருக்கிறார். இவர் 2012-ல் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியில் சேர்ந்தார்.

பின்னர் அந்த கட்சியில் இருந்து விலகி கர்நாடக ஜனதா கட்சியில் இணைந்தார். அந்த கட்சியிலும் நீடிக்காமல் பி.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். அந்த கட்சி சார்பில் ரெய்ச்சூர் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இதனால் அரசியலை விட்டு விலகி சினிமாவில் தீவிரமாக நடித்து வந்தார். இந்த நிலையில் பூஜா காந்தி தற்போது மீண்டும் தேவகவுடாவின் ஜனதா தளம் கட்சியில் சேர்ந்துள்ளார். கர்நாடக அரசியலை இரண்டு நடிகைகளும் கலக்கி வருவதாக கூறுகின்றனர்.

Published by
Dinasuvadu desk

Recent Posts

“நான் தயார் பன்னா தரமா இருக்கும்” சம்பவம் செய்த வெற்றிமாறன்! விடுதலை 2 டிவிட்டர் விமர்சனம்!

சென்னை : தரமான படைப்புகளை எப்போது ஏமாற்றம் அளிக்காமல் மக்களுக்கு கொடுக்கும் இயக்குநர்களில் ஒருவர் வெற்றிமாறன். இதுவரை இவர் இயக்கிய…

18 minutes ago

“பொங்கலில் நடைபெறும் யுஜிசி – நெட் தேர்வு தேதியை மாற்றுக – சு.வெங்கடேசன் கோரிக்கை!

சென்னை: ஒன்றிய அரசின் தேர்வு முகமைகள் எப்போதுமே பொங்கலை குறி வைப்பது ஏன்? ஒன்றிய அரசின் கீழ் உள்ள தேர்வு…

24 minutes ago

நெல்லையில் பயங்கரம்: நீதிமன்ற வாசலில் இளைஞர் வெட்டிக்கொலை!

திருநெல்வேலி: நெல்லை மாவட்ட நீதிமன்ற வளாகம் முன்பு, வழக்கு விசாரணைக்கு வந்த இளைஞர் ஒருவரை 4 பேர் கொண்ட கும்பல்…

46 minutes ago

எப்போது உருவாகிறது காற்றழுத்த தாழ்வு மண்டலம்? வானிலை ஆய்வு மையம் சொல்வதென்ன?

சென்னை: மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற…

1 hour ago

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க நெல்லிக்காய் குல்கந்து செய்வது எப்படி?.

சென்னை :நெல்லிக்காய் குல்கந்து தித்திக்கும் சுவையில் செய்வது எப்படி என இந்த செய்தி  குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; நெல்லிக்காய்…

1 hour ago

தொடர்ந்து சரியும் தங்கம் விலை… இன்று சவரனுக்கு ரூ.240 குறைவு!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. சொல்லப்போனால், கடந்த மூன்று…

2 hours ago