இந்த அழகுராணியை யார் என்று தெரிகிறதா? : இன்று 44 பிறந்தநாள்
ஐஸ்வர்யா ராய் பச்சன், இவரை தெரியாதவர் யாரும் இருக்க மாட்டார்கள். இவர் 1994-இல் உலக அழகியாக தேர்ந்தெடுக்கபட்டார். அதன் பின் இந்தியா சினிமாவில் நுழைந்தவர் இன்று வரை முன்னணியில் உள்ளார். திருமணத்துக்கு பிறகும் உலகில் மிக அழகான பெண்ணாக இருக்கிறார்.
இவர் உலக அழகி பட்டதை வென்ற பிறகு தமிழில் முதன் முதலாக சங்கர் படமான ஜீன்ஸில் அறிமுகமானார்.
அதன் பின் இந்தி, ஆங்கிலம், தமிழ், பெங்காலி, தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னனி நடிகையாக வலம் வந்தார்.
இவருக்கு தற்போது 44-ஆவது வயதில் அடியெடுத்து வைக்கிறார்.
இவர் மேலும் தேவாஸ் (2002), ரெயின்கோட் (2004) மற்றும் ஜோதா அக்பர் (2008) போன்ற மிகப்பிரபலமான படங்களில் நடித்திருந்தார்.
2003 ஆம் ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாவில் ஜூரி உறுப்பினராகப் பணியாற்றிய முதல் இந்திய நடிகர் இவர்தான். அத்துல் மஞ்சிர்கரின் ஃபேன்னி கான் படத்தில் ஐஸ்வர்யா அடுத்ததாக காணப்படுவார்.